ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு ?



ஜெய்சால்மர் நகரின் இதய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோட்டையானது வரலாற்று காலம் நெடுகிலும் எண்ணற்ற போர்களையும், முற்றுகைகளையும் சந்தித்திருக்கிறது. அதிலும் 1294ஆம் ஆண்டு துருக்கியை சேர்ந்த கில்ஜி வம்சத்தின் இரண்டாவது அரசனான அலாவுதீன் கில்ஜியால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை தாக்குதலின் முடிவு நம் நெஞ்சை பதற வைக்கும்.
கில்ஜியின் சொந்த நாடான துருக்கியில் இருந்து ராஜஸ்தான் வழியாக 3000க்கும் மேற்ப்பட்ட குதிரைகளில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களை ஜைசால்மர் ராஜ்யத்தை சேர்ந்த பட்டி இனத்தவர்கள் கொள்ளையடித்துவிடுகின்றனர் . இதனை கேள்வியுற்று வெகுண்டெழுந்த அலாவுதீன் கில்ஜி ஜைசால்மர் நகரின் மீது படையெடுத்து செல்கிறார்.
அலாவுதீன் கில்ஜியின் படைகள் இந்த ஜைசால்மர் கோட்டையை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் முற்றுகையிட்டு போர் புரிகின்றன. இந்த எட்டு வருடங்களும் போருக்கு காரணமாக அமைந்த பட்டி வம்சத்தினரே கில்ஜியின் படைகளுக்கு எதிராக வீரம் செரிக்க போர் புரிந்திருக்கின்றனர். பின்னர் ஒருகட்டத்தில் கோட்டையினுள் சேமிக்கப்பட்டிருந்த உணவு தீர்ந்துபோகிறது.

அதே காலகட்டத்தில் ஜைசால்மரின் அரசர் ஜெத்சியும் மரணமடைகிறார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கிஜ்லி தனது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததோடு மட்டுமில்லாமல் வெளியிலிருந்து கோட்டைக்கு உணவு கொண்டு செல்லப்படும் எல்லா பாதைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்.

இது நடந்தவுடன் கோட்டையை பாதுகாத்து வந்த 3800 பட்டி வீரர்களும் கோட்டையின் கதவுகளை திறந்து எதிரியுடன் நேருக்கு நேராக சமர் செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். பின்னர் சில வருடங்கள் கழித்து மீண்டும் இக்கோட்டையை பட்டி வம்சத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர்.
அன்றிலிருந்து இன்றுவரை இக் கோட்டையினுள் பட்டி வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாக ஏராளமான அளவில் வசித்து வருகின்றனர்.இன்று ராஜஸ்தானின் மிகமுக்கியமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக இந்த ஜைசால்மர் கோட்டை திகழ்கிறது.
மஞ்சள் நிறமுள்ள மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டை சூரிய அஸ்தமனத்தின் போது தங்க நிறத்தில் ஒளிர்வதால் ‘தங்க கோட்டை’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஜெய்சல்மேருக்கு செல்ல பயண வசதிகள்
விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும் விதத்தில் ஜெய்சல்மேர் அமைந்துள்ளது. இந்த நகரத்துக்கு அருகாமையில் உள்ள விமானத்தளமாக ஜோத்பூர் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.
இது புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் பல விமான சேவைகளை கொண்டுள்ளது. தவிர இதர முக்கிய இந்தியப் பெருநகரங்களான கொல்கத்தா, சென்னை, மும்பை மற்றும் பெங்களூருவிலிருந்து தினசரி விமான சேவைகள் ஜோத்பூர் விமான நிலையத்துக்கு இயக்கப்படுகின்றன.
ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்தே பிரிபெய்ட் டாக்சிகள் ஜய்சல்மேருக்கு கிடைக்கின்றன. பயணிகள் ரயில் மூலமாகவும் ஜெய்சல்மேரை வந்தடையலாம்.
ஜெய்சல்மேர் ரயில் நிலையத்தை ஜோத்பூர் மற்றும் முக்கிய இந்திய நகரங்களுடன் இணைக்கும் ரயில் சேவைகள் தினசரி உள்ளன.
இவை தவிர டெல்லி, ஜெய்ப்பூர், அஜ்மேர், பிக்கானேர் போன்ற நகரங்களிலிருந்து டீலக்ஸ் மற்றும் செமிடீலக்ஸ் பேருந்து வசதிகள் ஜெய்சல்மேர் நகருக்கு இயக்கப்படுகின்றன.
தங்க நகரமான ஜெய்சல்மேர் வருடமுழுவதும் வறண்ட வெப்பமான பருவ நிலையைக் கொண்டுள்ளது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவையே இங்கு முக்கியமான பருவ காலங்களாகும். அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் இங்கு விஜயம் செய்ய மிகவும் ஏற்ற காலமாகும்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment