ilakkiyainfo

கரவெட்டிப் பகுதியில் காணமல் போன இரு பிள்ளைகளின் தாயாா் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

கரவெட்டிப் பகுதியில் காணமல் போன இரு பிள்ளைகளின் தாயாா் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
October 27
17:00 2014

யாழ். கரவெட்டி குருக்கள் வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான உதயகுமார் சிவகுமாரி (42) என்பவா் இன்று திங்கட்கிழமை (27) காலை கரவெட்டியிலுள்ள வயல் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பெண் கடந்த 24ஆம் திகதி வீட்டிலிருந்து பிள்ளைகளை தனியார் வகுப்பில் விட்டு வருவதாக சென்றவர் தொடர்ந்து வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து இவரது உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்படி பெண்ணை காணவில்லையென முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில் மேற்படி பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 3 காதலா்கள் – யாழ் பல்கலைக்கழ மாணவி மீது வீடு புகுந்து தாக்குதல்
27-10-2014
manavi_thakkதிருநெல்வேலிப் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து இருந்த பல்கலைக்கழக மாணவி மீது நேற்று இரவு 9 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவி தங்கியிருந்த அறைக்கு வழமையாக வரும் மாணவியின் ஆண் நண்பரே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டதாக வீட்டு உரிமையாளா் தெரிவித்துள்ளார்.

தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மாணவி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

கடும் மது போதையில் வந்த மாணவியின் ஆண் நண்பா் மாணவிக்கு முன்னால் தொலைபேசியில் இன்னொரு ஆணுடன் கதைத்துக் கொண்டு இருந்ததாகவும் அதன் பின்னரே மாணவியை பக்கத்தில் இருந்த கதிரையால் தாக்கியதாகவும் மாணவி தங்கியிருந்த வீட்டுக்காரப் பெண் தெரிவித்துள்ளார்.

இதே வேளை குறித்த மாணவியை தான் ஏற்கனவே அறையில் இருந்து எழும்பச் சொன்னதாகவும் வீட்டுக்காரப் பெண் தெரிவித்துள்ளார்.

மாணவியைச் சந்திப்பதற்காக தாக்குதல் மேற்கொண்ட ஆண் நண்பரை விட மேலும் இருவா் அடிக்கடி மாணவியின் அறைக்கு வருவதாகவும் இது தொடா்பாக தான் எச்சரிக்கை விடுத்தும் மாணவி கேட்காதபடியால் குறித்த மாணவியை அறையை விட்டு எழும்பச் சொன்னதாகவும் அவா் தெரிவித்தார்.

மாணவியைத் தாக்கிய ஆண் நண்பா் யாழ் நகரப் பகுதியில் உள்ள இரும்புக் கடை ஒன்றின் உரிமையாளரின் மகன் எனவும் வீட்டு உரிமையாளரான பெண் தெரிவித்துள்ளார்.

இதே வேளை மாணவி தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பில் பொலிசில் முறையிடச் சொன்னபோது மாணவி மறுத்துவிட்டதாகவும் தெரியவருகின்றது.

மாணவி தாக்கப்பட்ட போது மாணவியின் அலறல் கேட்டு அயலில் இருந்தவா்கள் வந்துவிடவே மாணவியைத் தாக்கிய நண்பா் ஓடிவிட்டதாகவும் தெரியவருகின்றது.

தாயின் பணம், நகைகளைத் திருடிக் கொண்டு இரணைமடு இளைஞனுடன் ஓடிய மகள்

26-10-2014

Lovers_raseதனது நகை மற்றும் பணத்தை மகள் திருடிக்கொண்டு சனிக்கிழமை (25) இரவு ஓடிவிட்டதாக கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

வீட்டிலிருந்த 25 பவுண் நகை மற்றும் 2 இலட்சம் ரூபாய் காசு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கிளிநொச்சி இரணைமடுவை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் மகள் சென்றுவிட்டதாக தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் திருட்டு குற்றச்சாட்டில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

November 2020
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com