இந்தியா – மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில்  பயணம் செய்த பெண்ணிடம் திடீரென அப் பெட்டிக்கு வந்த நபர் தவறாக நடக்க முயற்சிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குறித்த பெண் தடுக்க முயற்சித்தும் குறித்த பெண்னை அந்த நபர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனை ரயிலில் பயணம் செய்த சக பயணி தனது  தொலைப்பேசியில்  வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவுசெய்துள்ளார்.

இவ் வீடியோ மும்பையில் பெண்களுக்கு உள்ள பாதுக்காப்பு குறித்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவத்தை பொலிஸார் அடுத்த பெட்டியில் இருந்த வேடிக்கை பார்த்ததாக சக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தானே ரயில் நிலையத்தில் குறித்த நபரை பொலிஸார்  கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.