Site icon ilakkiyainfo

கடத்­தப்­பட்ட நாலரை வயது சிறுவன் நேற்­றி­ரவு மீட்பு :சந்தேக நபர்கள் தலைமறைவு

கல்­க­முவ மீக­லேவ பிர­தே­சத்தில் கடந்த 27 ஆம் திகதி கடத்­தப்­பட்ட நாலரை வயது சிறு­வ­னான யசின் லங்­காநாத் குமார ஏக்­க­நாயக்க கல்­க­முவ எம்­போ­கம பிர­தேச வீடொன்றில் இருந்து நேற்று வெள்ளிக்­கி­ழமை இரவுமீட்­கப்­பட்­டுள்ளான்.

பொலிஸ் மா அதி­பரின் பணிப்­பு­ரையின் பேரில் குறித்த பிர­தே­சத்­திற்கு கொழும்பில் இருந்து சென்­றி­ருந்த குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரே விசா­ர­ணை­களை நடத்தி நேற்று இரவு 10.30 மணி­ய­ளவில் எந்­த­வித ஆபத்­து­மின்­றியும் வெளிக்­கா­யங்கள் ஏது­மின்­றிய நிலை­யிலும் சிறு­வனை மீ்ட்டிருப்­ப­தாக மாகோ பிராந்­திய உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சமன் திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

எனினும் சிறுவன் கடத்­தப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் நால்­வரும் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள அதே­வேளை அவர்கள் தலை­ம­றை­வாக இருப்­ப­தா­கவும் பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

சிறுவன் மீட்­கப்­பட்ட சம­யத்தில் குறித்த வீட்டில் வேறு எவரும் இருக்­க­வில்­லை­யென்றும் தெரி­ய­வ­ரு­கின்­றது. புல­னாய்வு பிரி­வி­னரின் வரு­கையை அறிந்தே சந்­தேக நபர்கள் தப்பிச் சென்­றி­ருக்­கலாம் என்றும் பொலி­ஸாரால் சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தாக உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சமன் திஸா­நா­யக்க மேலும் தெரி­வித்தார்.

கடந்த 27 ஆம் திகதி கடத்­தப்­பட்ட மேற்­படி சிறுவன் தொடர்பில் நேற்று மாலை வரை எந்­த­வித தக­வல்­களும் கிடைக்­காத நிலையில் பொலி­ஸாரும் புல­னாய்வு பிரி­வி­னரும் கடு­மை­யான தேடுதல் மற்றும் விசா­ரணை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வந்­தனர். இந்­நி­லை­யி­லேயே பொலிஸ் மா அதி­பரின் விஷேட பணிப்­பு­ரைக்­க­மைய கொழும்பில் இருந்து குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவினர் கல்கமுவ மீகலேவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

இதேவேளை சிறுவன் மீட்கப்படுவதற்கு முன்பதாக சிறு­வனின் வீட்­டி­லி­ருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள கிணறு ஒன்­றினை நேற்று முன்தினம் நிக­வ­ரட்­டிய பொலிஸார் நீரை இறைத்து சோதனை செய்­தனர். குறித்த கிணற்று சுவரில் இரத்தக் கறையை ஒத்த அடை­யா­ளங்கள் சில காணப்­பட்­டதை அடுத்தே அவர்கள் இவ்­வாறு இரு நீர் பம்­பி­களை உப­யோ­கித்து இந்த சோத­னை­யினை மேற்­கொண்­டனர்.

அத்­துடன் மாஹோ பிராந்­தி­யத்­திற்கு பொறுப்­பான உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சரின் கைய­டக்க தொலை­பே­சிக்கு சிறுவன் கடத்­தப்­பட்டு வைக்­கப்­பட்­டுள்ள இடம் தொடர்பில் சிலர் தகவல் கொடுத்­துள்­ளனர். எனினும் அந்த தக­வல்­களில் உண்மைத்தன்மை இல்லை எனவும் பலர் தேவா­ல­யங்­களில் சிறுவன் இருக்­கலாம் என்ற ஊகங்­களை தன்­னிடம் தெரி­வித்­த­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சமன் திஸா­நா­யக்க கேச­ரி­யிடம் குறிப்­பிட்டார்.

அத்­துடன் சிறு­வனின் தந்­தை­யான வர்த்­தகர் மகிந்த குமா­ரவை தொலை­பே­சியில் தொடர்பு கொண்­டுள்ள கடத்­தல்­கா­ரர்கள் பல இலட்சம் ரூபா கப்பம் கோரி­ய­தாக தகவல் ஒன்று வெளி­யா­கி­யுள்­ளது. எனினும் அது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்­தி­யுள்ள நிலையில் அவ்­வா­றா­ன­தொரு கப்பம் கோரல் தொடர்பில் வர்த்­தகர் மகிந்த குமார பொலி­ஸா­ருக்கு எவ்­வித தக­வல்­க­ளையும் வழங்­க­வில்­லை­யென விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.

வடமேல் மாகா­ணத்­திற்கு பொறுப்­பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபே­சிறி குண­வர்த்­தன நிக­வ­ரட்­டிய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யேட்சர் ஆகி­யோரின் நேரடி மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சமன் திஸா­நா­யக்க தலை­மை­யி­லான 5 பொலிஸ் குழுக்­களும் சுமார் 15 பேரின் வாக்கு மூலங்­களை பதிவு செய்­துள்­ளன.
இந்நிலையிலேயே குறித்த சிறுவன் நேற்று இரவு  வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளான்.

Exit mobile version