ilakkiyainfo

கடத்தப்பட்ட சிறுவனை தனது பிள்ளை என காண்பித்து இந்திய கணவனிடம் பணம் பறிக்கும் திட்டம் அம்பலம் – புத்தளம் சிறுவன் கடத்தல் விசாரணைகளில் தகவல்

September 13
10:55 2016

புத்­தளம் வான் வீதியில் வைத்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை நான்கு வயதுச் சிறுவன் ஒரு­வனைக் கடத்­திய சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட  இந்­திய பிரஜை ஒருவர் உட்­பட  மூவரை 14 ஆம் திகதி வரையில் விளக்கமறி­யலில் வைக்­கு­மாறு புத்­தளம் பதில் நீதிவான் முஹம்­மது இக்பால் சனிக்­கி­ழமை உத்­த­ர­விட்­ட­தோடு சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த முச்­சக்­கர வண்­டியின் சாரதி பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த கடத்தல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரு பெண்­க­ளுடன் ஆண் ஒரு­வ­ருமே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

14269357_586640351538644_177546573_nபுத்­தளம் வான் வீதியில் வசிக்கும் முஹம்­மது ஹுசைன் என்­ப­வரின் மக­னான முஹம்­மது பாதிர் என்ற இந்தச் சிறுவன் யாசகம் கேட்டு வந்த இனந்­தெ­ரி­யாத பெண்­மணி ஒரு­வரால் வெள்­ளிக்­கி­ழமை பகல் வேளையில் கடத்தி செல்­லப்­பட்­ட­தாக புத்­தளம் பொலிஸார் தெரிவித்­தி­ருந்­தனர்.

இந்தக் கடத்­த­லை­ய­டுத்து உடன் செயற்­பட்ட பொலிஸார் பொது­ மக்­களின் ஒத்­து­ழைப்­போடு யாசகம் கேட்டு வந்த இரு பெண்­க­ளையும் அன்­றைய தினமே கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

பின்னர் சிறுவனை அன்­றைய தினம் இரவு முச்­சக்­கர வண்­டியில் அழைத்துவந்து கொண்­டி­ருந்தபோது பொலி­ஸாரால் மீட்­கப்­பட்டு முச்­சக்­கர வண்­டியில் வந்த இந்­திய பிர­ஜை­யுடன் முச்­சக்­கர வண்டிச் சார­தியும் கைது செய்­யப்­பட்­டனர்.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பெண், இந்­திய பிர­ஜையைத் திரு­மணம் செய்து கொண்­ட­தோடு அவ­ருக்குப் பிறந்த குழந்தை ஒன்று இருப்­ப­தாகத் தெரி­வித்து குறித்த இந்­திய பிர­ஜை­யிடம் தொட­ராகப் பணம் பெற்று வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரியவந்துள்ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் இந்­திய பிரஜை இலங்கை வந்­துள்­ள­தோடு கடத்­தப்­பட்ட சிறு­வனை தனது பிள்ளை எனக்­காட்­டு­வ­தற்கே சிறுவன் கடத்தப்­பட்­ட­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரியவந்­துள்­ளது.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய குறித்த பெண்ணை 14 ஆம் திகதி அடை யாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் பதில் நீதிவான் உத்தர விட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com