ilakkiyainfo

கடலுக்குச் சென்று காணாமற்போன காரைதீவு மீனவர் மரணம்

கடலுக்குச் சென்று காணாமற்போன காரைதீவு மீனவர் மரணம்
October 11
06:37 2019

 

காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச் சென்று காணாமல்போன சாய்ந்தமருது, காரைதீவைச் சேர்ந்த மூன்று மீனவர்களில், காரைதீவு மீனவர் மரணமடைந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது 47) என்பவரே, ஆழ்கடலில் வைத்து மரணமானதாகக் கூறப்பட்டுள்ளது.

image_89723446c5இவர், கடலுக்குச் சென்று 10ஆவது நாளில் அதாவது 28ஆம் திகதி மரணித்துள்ளாரெனவும் இரு நாள்களின் பின்னர் சடலத்தைக் கடலுக்குள் போட்டதாகவும், சக மீனவர்களான சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனி முகம்மது ஜூனைதீன் (வயது 36), இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது 37) ஆகியோர் கூறியுள்ளனர்.

அந்த இரு மீனவர்களும் சிகிச்சைக்காக, திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களை, சொந்த ஊரான சாய்ந்தமருதுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்த இரு மீனவர்களது அலைபேசி உள்ளிட்ட பொருள்கள், விசாரணையின் பொருட்டு தம்வசம் வைத்திருப்பதாகக் கூறிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேற்படி மீனவர்கள் சென்ற இயந்திரப்படகு, சர்வதேசக் கடற்பரப்பில் 21 நாள்களின் பின்னர், நேற்று முன்தினம் (08) மாலை தென்பகுதி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com