ilakkiyainfo

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: மின்னல் தாக்கி அக்காள்-தம்பி பலி

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: மின்னல் தாக்கி அக்காள்-தம்பி பலி
September 29
04:19 2020

 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணி அளவில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.

பின்னர் 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

இதேபோல் பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புவனகிரி மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.

 

இதற்கிடையே மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியானார்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:-

புதுப்பேட்டை அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு நிஷா(வயது 13) என்ற மகளும், கவியரசன்(11) என்ற மகனும் இருந்தனர்.

நிஷா புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், கவியரசன் மணப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்துள்ளனர்.

நேற்று நிஷாவும், கவியரசனும் தங்களுக்கு சொந்தமான மாடுகளை, அதே பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர்.

 

பின்னர் மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியதும், அவர்கள் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் 2 பேர் மீதும் திடீரென மின்னல் தாக்கியது.

இதில் நிஷாவும், கவியரசனும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகினர். இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

March 2021
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 

Latest Comments

சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com