ilakkiyainfo

கடுமையான நோய் பாதிப்புக்குள்ளானோர் வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும் – வைத்தியர் சத்தியமூர்த்தி

கடுமையான நோய் பாதிப்புக்குள்ளானோர் வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும் – வைத்தியர் சத்தியமூர்த்தி
April 07
21:17 2020

கடுமையான நோய்ப் பாதிப்புக் குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தனியான பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். எனவே நோயாளர்களைப் பராமரிப்பதற்கு ஏனைய விடுதிகள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

“எனவே பொது மக்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்தால் கொரோனா தொற்று ஏற்படும் என்று அச்சமடையத் தேவையில்லை. சாதாரண நோய்களுக்கு பிரதேச வைத்தியசாலைகளில் மருத்துவ சிகிச்சைப் பெற்றுக் கொள்ள முடியும். எனினும் பெரியளவிலான நோய்களுக்கு கட்டாயம் போதனா வைத்தியசாலைக்கு வரவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

202003161122465453_Tamil_News_Coronavirus-Seven-more-infected-in-Sri-Lanka-taking-total_SECVPF.gifயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களாக தொடர்ச்சியாக நீடித்துவரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வைத்தியசாலையில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தீவகப் பகுதி , தென்மராட்சி, வடமராட்சி ,மற்றும் ஏனைய மாவட்டங்களிலிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

இருதய சிகிச்சை, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், கண் நோய், போன்ற நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை பெறுவதிலேயே நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்ததாவது;

கொரோனா தொற்று பரவல் நிலை ஏற்பட்ட பின்னர் மாதாந்த சிகிச்சைகள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நிறுத்தப்பட்டன. அவர்களுக்கான மருந்துகள் தொலைபேசி மூலமாக வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இருப்பினும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சில பேருக்கு மருந்துகள் கிடைப்பதில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மருத்துவர்கள் அந்தந்த நோயாளிகளுக்கும் இருந்திருக்கும் முறையின் கீழ், விரைவாக தொடர்பினை ஏற்படுத்தி அவர்களுக்கு மருந்து வழங்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் – என்றார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com