ilakkiyainfo

கடும் மழையுடன் கூடிய காலநிலை ஜுன் வரை தொடரும்: சீரற்ற காலநிலை நிலைமைகள் தொடர்பில் அறிந்துகொள்ள உடன் அழையுங்கள் இலக்கங்கள்!!

கடும் மழையுடன் கூடிய காலநிலை ஜுன் வரை தொடரும்: சீரற்ற காலநிலை நிலைமைகள் தொடர்பில் அறிந்துகொள்ள உடன் அழையுங்கள்  இலக்கங்கள்!!
May 26
12:51 2017

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை ஜுன் 05 ஆம் திகதி வரை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

சில பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாகவே தற்போது கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

இதற்கமைய இன்று நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் 150 மில்லிமீற்றரிலும் அதிக மழை பெய்யுமென்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல்,தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அதிகூடிய மழையை எதிர்பார்க்க முடியும்.

கடும் மழையுடன் கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமென்பதனால் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தென்மேல் மாகாணங்களைத் தவிர்ந்த நாட்டின் ஊவா,கிழக்கு ஆகிய ஏனைய மாகாணங்களில் மாலை வேளைகளில் மட்டும் மழைபெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மன்னாரிலிருந்து கொழும்பு ஹம்பாந்தோட்டையூடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசம் மிகவும் கொந்தளிப்புடன் இருக்குமென்றும் காற்று மணித்தியாலத்திற்கு சுமார் 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென்றும் வானிலை அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இக்காலப்பகுதியில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் விழிப்புடன் செயற்படுவது அவசியமென்றும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிலைமைகள் தொடர்பில் அறிந்துகொள்ள உடன் அழையுங்கள்

download-1-5

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பிலும் அதன் நிலைப்பாடு தொடர்பிலும் மக்கள் அறிந்து கொள்ளவதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 0112136226, 0112136136, 0773957900 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக அனர்த்தங்கள் தொடர்பான நிலவரங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த சேவை 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகளின் போது 117 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com