ilakkiyainfo

கணவனைக் கொல்லும் மனைவியின் திட்டம்: காதலனுடன் சேர்ந்த நடத்திய நாடகம் அம்பலமானது.

கணவனைக் கொல்லும் மனைவியின் திட்டம்:  காதலனுடன் சேர்ந்த நடத்திய நாடகம் அம்பலமானது.
February 07
02:14 2016

திடீரென பாரிய சப்தத்துடன் குண்டு வெடித்தது. நீர்கொழும்பு குரண பராக்ரம் வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் வாகனமொன்று, ஹைபிலிட் வாகமொன்றும் சேதத்துக்குள்ளானது.

ஹைபிரிட் வாகனத்தின் பெட்டரி வெடித்ததின் காரணமாக இது சம்பவித்திருக்கலாமென அனைவரும் அபிப்பிராயப்பட்டனர்.

நீர்கொழும்பு பொலிஸாரும் சோகோ அதிகாரிகளும் ஸ்தலத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். கைகுண்டுன் லிவர் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதால்  இது பெட்டரி வெடிப்பல்ல, குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரியவந்தது.

நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுர அபேவிக்ரம உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக விஜேரட்ணவுக்கு அளித்த ஆலோசனையையடுத்து விசாரணைகளுக்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

குண்டு தற்செயலாக வெடித்ததா, தாக்குதலா, எதற்காக தாக்குதல் போன்றவைகளை அறியவேண்டியிருந்தது.

இக்கைகுண்டு தாக்குதலால் காயமடைந்த “லுஜித்” என்பவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற பொலிஸார் அவரை விசாரணை செய்தனர். தன்னை குண்டினால் தாக்குமளவுக்கு தனக்கு விரோதிகளில்லையென லுஜித் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

மாதம்பை பிரதேசத்தில் தனக்கு ஐந்து ஏக்கர் காணியிருப்பதாகவும் அந்தக் காணியில் தேக்கு மரங்கள் வெட்டி விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் வரும்வரைதான் காத்திருந்தபோது இக்குண்டு வெடித்ததாகவும் லுஜித் மேலும் சொன்னார்.

தன்னை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும்போது வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அதன்பிறகு தொலைபேசியின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இவர் கூறுவது உண்மைதானா என அறிய தொலைபேசி இலக்கத்தை பெற்ற பொலிஸார் சிம் அட்டையின் உரிமையாளரை தேடினர்.

இத்தாலியிலிருந்து விடுமுறையில் இங்கு வந்த பெண் ஒருவர் இதனை உபயோகித்து பின்னர் மீண்டும் அப்பெண் இத்தாலி சென்றுள்ளதை பொலிஸார் அறிந்தனர்.

இத்தாலியிலிருந்து இங்குவந்த “ரவி” என்பவர் இந்த சிம் அட்டையுடைய கையடக்க தொலைபேசியை உபயோகித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

17.12.2015முதல் 04.01.2016 வரை மூன்று அல்லது நான்கு நபர்களுடன் தொலைபேசி தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நான்காம் திகதிக்குப் பின் தொலைபேசி தொடர்புகள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரியவந்தது.

கையடக்க தொலைபேசி மூலம் அதிகளவு தொடர்பு கொண்ட நபர் அடையாளம் காணப்பட்டார். பிலியந்தலையில் வதியும் இராணுவ கமாண்டோ பிரிவை சேர்ந்த “சமன் குமார” என்பது இவரது பெயர்.

இவர் இராணுவ சேவையிலிருந்து பதினொரு வருடங்களுக்குமுன் விலகியிருந்தார். இவரை விசாரணை செய்தபோது குண்டு விவகாரம் வெளியானது என குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தான் கைகுண்டை வீசியதை சமன்குமார ஒப்புக்கொண்டார். இது ஒப்பந்தம் செய்யப்பட்ட கொலை முயற்சியாகும்.

லுஜித் என்பவரை கொலைசெய்ய ரூபா இரண்டு இலட்சம் தருவதாகவும், வீடு நிர்மாணிக்க உதவுவதாகவும், தன்னுடன் துபாய் நாட்டுக்கு செல்ல தயாராகியிருக்கும்படியும் இத்தாலியில் வதியும் பெண் தெரிவித்ததால்தான் இதற்கு உடன்பட்டதாக சமன்குமார பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இம்முயற்சியில் “தனுஷ்க்” என்பவர் தனக்குதவியதாகவும் அவர் தெரிவித்தார்.

“லுஜித்” இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் தன் மனைவியுடன் பல வருடங்களாக இத்தாலியில் தொழில் செய்துள்ளார்.

இவர் சம்பாதித்த பணத்தின் மூலம் பெற்ற காணிகளனைத்தும் இவரது பெயரிலுள்ளன. லுஜித் தன் மனைவியுடன் பல வருடங்களின் பின் இங்கு வந்தார். பணத்தின் மூலம் பல காணிகளை வாங்கினார்.

ஏற்கனவே மாதம்பையில் வாங்கிய ஐந்து ஏக்கர் காணியும் இவர் பெயரிலுள்ளது. இத்தோட்டத்தில் இவர் அதிகளவு நேரத்தை கழித்தார். லுஜித்தின் மனைவி இரண்டு பிள்ளைகளுடன் குரண வீட்டில் வசித்தார்.

விஸா காலாவதியானதால் அதனை புதுப்பிக்க  லுஜித்தின் மனைவி தனியாக இத்தாலி சென்றார்.

அங்கு ஒரு நண்பியின் வீட்டுக்குச் சென்றபோது இவரது கையடக்க தொலைபேசி இலக்கத்தை நண்பியின் கணவரான “ரவி” பெற்றதுடன் இருவரிடையே கள்ளக் காதல் மலர்ந்தது.

இவர்களது கள்ளக் காதல் விவகாரத்தை இத்தாலியிலுள்ள லுஜித்தின் நண்பர்கள் நேரில் கண்டு லுஜித்திடம் தெரிவித்தனர். இதையடுத்து இருவரிடையே விரிசல் ஏற்பட்டது.

இங்கு வந்த பின்னர் லுஜித் தன் மனைவியுடன் சண்டை சச்சரவிலீடுபட்டார். மனைவியை துன்புறுத்தினான். மனைவியின் கடவுச்சீட்டை தன் வசம் வைத்துக் கொண்டான்.

மனைவியை கவனிக்காததினால் அவள் தனிமையானாள். உணவு விடயத்திலும் கவனிப்பார் அற்றநிலை. விரக்தியடைந்த லுஜித்தின் மனைவி இதுபற்றி இத்தாலியிலுள்ள காதலனிடம் தெரிவித்தாள்.

இதையடுத்து லுஜித்தை ஒழித்துக்கப்பட்ட இத்தாலியில் திட்டம் ஆரம்பமானது. “இத்தாலியிலுள்ள நண்பனொருவனின் உதவியுடன் பிரியந்தலை சமன்குமாரவை இதற்கு பயன்படுத்தினர்.

இக்கொலை முயற்சியில் தன் மனைவி சிக்கக் கூடாது. அவள் கணவனின் ஐந்து ஏக்கர் காணியை பெறவேண்டுமென்ற நோக்கில் கணவனான ரவி இங்கு வந்தார்.

இத்ததாலியிலுள்ள ஒரு பெண்ணின் சிம் அட்டையுடன் இங்குவந்த ரவி அதனை பயன்படுத்தி சமனுடன் தொடர்பு கொண்டார். லுஜித்தின் மனைவியுடனும் தொடர்புகொண்டான்.

லுஜித்தை அவரது தோட்டத்தில் கொல்வதற்கு திட்டமிடப்பட்டது. ரவி தனது நண்பர்களான சமன், தனுஷ்கவுடன் மாதம்பை தோட்டத்தை தேடிச்சென்றனர்.

ஆனால் இவர்களால் அத்தோட்டத்தை அடையாளம் காணமுடியாது போகவே அது பற்றி லுஜித்தின் மனைவியிடம் தெரிவிக்க அவள் இரண்டு பிள்ளைகளையும் வீட்டில் வைத்து காதலராக ரவியுடன் சென்று தன் கணவன் லுஜித்தின் ஐந்து ஏக்கர் தோட்டத்தை காண்பித்தாள்.

தேக்கு மரங்கள் பலகைகள் வாங்க வந்ததாகக்கூறி தோட்டத்தினுள் நுழையலாமெனவும் லுஜித்தின் மனைவி தெரிவித்துள்ளாதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரவி தன் நண்பர்களான சமன் தனுஷ்கவுடன் தோட்டத்துக்கு சென்று தேக்கு மரங்களை பார்வையிட்டபின் மீண்டுமொருநாள் பணத்துடன் வந்து மரங்களை பெற்றுக்கொள்வதாகக்கூறி திரும்பினர்.

பணத்துடன் தான் வருவதாக கூறிய ரவி, லுஜித்தை இரவு ஒன்பது மணியளவில் பராக்கிரம வீதிக்கு வரும்படி கூறினார். வாடகைக்கு பெற்ற வாகனத்தில் கட்டுநாயக்கவுக்கு வரும் ரவி சமனை சந்தித்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த தனுஷ்கவை சந்தித்து அவர்களிடம் கைகுண்டை ரவி கொடுத்தார்.

வேலையை முடித்துக்கொண்டு வியாங்கொடைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு ரவி இருவரிடமும் கூறி லுஜித்துடன் தொடர்பு கொண்டு பாதையில் போக்குவரத்து நெரிசல் சற்று தாமதமாகும் இன்னும் ஐந்து நிமிடங்களுக்கு அதே இடத்திலிருங்கள் என கூறினான்.

கைகுண்டுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற சமன் பராக்ரம வீதியில்  சமன் கைகுண்டை லுஜித் மீது எறிந்தான். பாரிய சப்தம் கேட்டது. வேலை முடிந்து விட்டது வா போகலாமென்றான் சமன்.

“ரவி அண்ணே வேலையை கச்சிதமாக முடித்துவிட்டோம் என்று தொலைபேசியில் தெரிவித்தான் சமன். உடனே வியாங்கொடைக்கு வருமாறு ரவி கூறினான்.

தெய்வாதீனமாக உயிர் தப்பிய லுஜித் சிறுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். ரவியின் தொலைபேசி அலறியது.

“நான் லுஜித் பேசுகிறேன் சிறிய சம்பவமொன்று ஏற்பட்டு சிறிய காயங்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியிலிருக்கிறேன் என்றதும் ரவி அதிர்ச்சியிடைந்தான்.

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டவன் தன்னுடன் கதைப்பதையறிந்து, தான் ஒப்படைத்த வேலையை சமன் தனுஷ்க ஒழுங்காக செய்யவில்லையென்பதையறிந்தான்.

ரவியிடம் வந்து சேர்ந்த இருவரையும் திட்டித் தீர்த்தான் ரவி இராணுவ கமாண்டேர்வான உனக்கு ஒழுங்காக ஒருகுண்டை வீச முடியவில்லை கேவலம் என்றான் ரவி.

“எனக்கு பத்தாயிரம் ரூபா கொடுத்த ரவி மிகுதியை பின்னர் தருகிறேன் என்றார் ஆனால். அவர் மறுநாள் இத்தாலிக்கு பயணமாகியிருந்தார் என சமன் பொலிஸாரி்டம் தெரிவித்தான். சமனின் வாக்கு மூலத்தையடுத்து தனுஷ்க கைதுசெய்யப்பட்டாள்.

கணவனை கொலை செய்ய சூழ்ச்சி செய்தது, அதற்கு உடந்தையாயிருந்தது என்ற குற்ற சாட்டின் பேரில் லுஜித்தின் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர்கள் மூவரும் நீர்கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபின் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர். இத்தாலிக்கு தப்பிச் சென்ற “ரவி”யை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது.

எம். எப். ஜெய்னுலாப்தீன்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com