இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், பெற்றோரால் மட்டுமே மிக உச்ச பாதுகாப்பையும், பாசத்தையும் வழங்க முடியும்.

ஆனால் தற்காலத்தில் பெண்குழந்தையாக இருந்தாலும் சரி, ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, சில சமயங்களில்  பெற்றோராலேயே   பிரச்சினைகள் வந்து சேர்ந்து விடுகின்றன.

அண்மையில், இதற்கு சான்றாக ஓர் விடயம் இரத்­தி­ன­புரியில் இடம்பெற்றுள்ளது.

தந்தையொருவர், தனது எட்டு வய­தான மகளை கொடூ­ர­மான முறையில் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கி­யமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்டுள்ளார்.

இவருக்கு 15 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட 2 வருட கடூ­ழியச் சிறைத்­தண்­டனை விதித்து இரத்­தி­ன­புரி மேல் நீதி­மன்ற நீதி­பதி  தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

மேலும், பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு 3 இலட்சம் ரூபா நஷ்­ட­ஈடு செலுத்­து­மாறும் நீதி­பதி பிர­தி­வா­திக்கு உத்­த­ர­விட்டார்.

இரத்­தி­ன­புரி, கரங்­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர், 2015 நவம்பர் 6 ஆம் திகதி தனது மகளைக் கொடூ­ர­மா­ன­வ­கையில் சித்­தி­ர­வதை  செய்­துள்­ள­தாக   இரத்­தி­ன­புரி மேல் நீதி­மன்றில் குற்­றப்­பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டது.

வழக்கின் ஆரம்ப விசா­ர­ணை­க­ளின்­போதே, பிர­தி­வாதி குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­தை­ய­டுத்து, அவரை குற்­ற­வா­ளி­யென தீர்ப்­ப­ளித்து கடந்த முதலாம் திகதி நீதிவான் தண்­டனை விதித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  இரவு 10 மணி­ய­ளவில், பிர­தி­வா­தி­யான தந்தை, தனது மக­ளுக்கு கணித பாடத்தை கற்­பித்­துள்ளார்.

அதன்­போது, கணித பாடத்தில் அவர் மிகவும் பல­வீ­ன­மாக உள்­ள­தாக தெரி­வித்து, குறித்த தந்தை, தனது மகளை கொடூ­ர­மாக தாக்­கி­யுள்­ள­தாக நீதி­மன்றில் தெரி­ய­வந்­துள்­ளது.

அவ்­வாறே, தாக்­கு­த­லுக்கு இலக்­கான சிறுமி அவ்­வி­டத்­தி­லேயே சிறுநீர் கழித்­துள்ளார்.

பின்னர் அவ­ரது தந்தை அவற்றை ஒன்­றாக சேக­ரித்து சிறு­மியை பருகச் செய்­துள்­ள­துடன், மிகு­தியை அவ­ரது தலையில் ஊற்றி சித்­தி­ர­வதை செய்­துள்­ள­தா­கவும், பின்னர் சிறு­மியை நீராட்டி வீட்­டுக்குள் அழைத்­து ­வந்­துள்­ள­தா­கவும் வழக்கு விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­தது.

மேலும், குறித்த சிறு­மியின் தாய், தந்­தை­யி­ட­மி­ருந்து பிரிந்து குரு­ணாகல் பிர­தே­சத்தில் வேறொரு நப­ருடன் வசித்­து­வந்­துள்ளார்.

குற்­றஞ்­சாட்­டப்­பட்ட நபரும் வேறொரு பெண்­ணுடன் வசித்­து­ வந்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது. சிறு­மியின் தாய், தந்தை பிரிந்து வேறு திரு­ம­ணங்­களை செய்­து­கொண்­ட­மையால், சிறுமி தனது பாட்­ட­னா­ரின் பாதுகாப்பிலேயே இருந்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதால், 15 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட 2 வருட கடூ­ழியச் சிறைத்­தண்­டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.