ilakkiyainfo

கண்களைத் தாக்கும் அலர்ஜி

கண்களைத் தாக்கும் அலர்ஜி
November 14
23:06 2016

அலர்ஜி என்­பது சரு­மத்­தில்தான் வரும் என்­றில்லை. கண்­க­ளிலும் வரலாம். கண்­களில் ஏற்­ப­டு­கிற பல பிரச்­னை­களும் ஒவ்­வா­மையின் அறி­கு­றிகள்  என்­பதே பல­ருக்கும் தெரி­வ­தில்லை.

குழந்­தைகள் மற்றும் பெரி­ய­வர்­க­ளுக்கு கண்­களில் ஏற்­படும் பருவ கால ஒவ்­வா­மைகள் மிகவும் சக­ஜ­மா­னவை. ஏற்கனவே அலர்ஜி   இருப்­ப­வர்கள், உதா­ர­ணத்­துக்கு ஆஸ்­துமா,  சைனஸ் போன்ற சுவாச மண்­டலம் தொடர்­பான அலர்ஜி இருப்­ப­வர்கள், சரும அலர்ஜி உள்­ள­வர்கள், கொசு கடித்தால் உடம்­பெல்லாம் சிவப்பு நிறத் தடிப்பைப் பெறுபவர்கள் போன்­ற­வர்­க­ளுக்கு கண்­க­ளிலும் அலர்ஜி வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம்.

பொது­வாக கண்­களில் வரக்­கூ­டிய அலர்­ஜிக்கு  Allergic Conjunctivitis என்று பெயர்.

Conjunctiva என்றால் கண்­களின் வெள்ளைப் பகு­திக்கு மேல் உள்ள கண்­ணாடி போன்ற டிரான்ஸ்ஃ­பரன்ட்  பகுதி.

அந்த வெள்ளைப் பகு­திக்குப் பெயர்  Sclera. அதற்கு மேல்   டிரான்ஸ்ஃ­பரன்ட் பகு­தி­யான  Conjunctiva வில் ஏற்­ப­டு­கிற அலர்­ஜிதான் Conjunctivitis.

குழந்­தை­க­ளுக்கு ஏற்­படும் இந்த நிலைக்கு Spring catarrh என்று பெயர்.

அதா­வது, ஸ்பிரிங் சீசன் என சொல்­லக்­கூ­டிய வசந்த காலத்தில் ஏற்­ப­டு­கிற அலர்ஜி இது. இதற்கு  Giant Papillary Conjunctivitis என இன்­னொரு பெயரும் உண்டு.

கண்­களின் மேல் இமைப் பகு­தியைத் தூக்கிப் பார்த்தால் பெரிய பெரிய கற்கள் போல அந்த conjunctiva பகுதி வீங்கிப் போயி­ருக்கும்.

அதனால் குழந்­தைக்கு வெள்ளை நிறத்தில் கயிறு மாதிரி அழுக்கு வந்து கொண்டே இருக்கும்.

தவிர கண்­களைப் போட்டுத் தேய்த்துக் கொண்டே இருப்­பார்கள். கண்கள் சிவந்து போகும். கண்­களின் வெள்ளைப் பகுதியா­னது மெது­வாக வித்­தி­யா­ச­மான நிறத்­துக்கு அதா­வது, வெளிர் மஞ்­ச­ளாக மாறி­விடும்.

குழந்­தையின் கண்­களே பார்ப்­ப­தற்கு வித்­தி­யா­ச­மாகக் காட்­சி­ய­ளிக்கும். பெரும்­பா­லான பெற்­றோரும் இதை சாதா­ரண அலர்ஜி என மருந்து போட்டு அலட்­சி­ய­மாக விட்­டு­வி­டு­வார்கள். மருத்­து­வ­ரிடம் அழைத்துச் செல்ல மாட்­டார்கள்.

கார்­னியா எனப்­ப­டு­கிற கரு­வி­ழியில் ரத்தக் குழாய்கள் கிடை­யாது. அதை Avascular என்­கிறோம்.

ஆனால், இந்த அலர்ஜி அலட்­சி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கிற பட்­சத்தில் கரு­வி­ழி­களில் ரத்தக் குழாய்கள் வளர்ந்து கரு­வி­ழிகள் வெள்­ளை­யாக மாறி, பார்வைக் குறை­பாடு ஏற்­படும் அபாயம் அதிகம்.

கூடவே கிளாக்­கோமா எனப்படு­கிற கண் அழுத்த நோய் அதி­க­ரிக்­கவும் வாய்ப்­புகள் அதிகம். அதா­வது, நீண்ட கால ஸ்டீராய்டு மருந்தின் உப­யோ­கத்­தாலும் கண் அழுத்த நோய் வரலாம். எனவே, இதை சாதா­ரண அலர்­ஜி­யாக அலட்­சி­யப்­ப­டுத்தக் கூடாது.

குழந்­தை­க­ளுக்கு 6 மாதங்­க­ளுக்கு ஒரு­முறை பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். அசுத்­த­மான மண்ணில் விளை­யாட விடக்­கூ­டாது.

கை நகங்­களை வெட்டி விட வேண்டும்.

குழந்­தைகள் வெளியில் சென்­று­விட்டு வீட்­டுக்கு வந்­ததும் கை, கால்­க­ளையும் கழுவப் பழக்­கு­வ­தோடு, கண்­க­ளிலும் குளிர்ந்த  தண்­ணீரை அடித்து சுத்தம் செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

தூசி, பூவின் மக­ரந்தம் மற்றும் பூச்­சிகள் இந்த மூன்­றும்தான் பிர­தா­ன­மாக   அலர்­ஜியை ஏற்­ப­டுத்­து­கிற  விஷ­யங்கள்.

இது தவிர தலையில் பொடுகு இருந்தால் கண்­களில் உள்ள இமை முடி­க­ளிலும் பொடுகு வரலாம். அதற்குப் பெயர் Blepharitis. அதா­வது, கண் இமையில் ஏற்­ப­டு­கிற அலர்ஜி.

இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பொடுகின் கார­ண­மாக ஏற்­ப­டு­வது. இன்­னொன்று இமை முடியில் ஏற்­ப­டு­கிற தொற்றின் கார­ண­மாக வரு­வது.

மிக அரி­தாக கண்­களில் பேன் கூட வரு­வ­துண்டு.

இமை முடி­களில் வரு­கிற பேன்­களைக் கண்­டு­பி­டிப்­பதே மிகவும் சிரமம். Slit lamps என்­கிற கரு­வியின் உத­வி­யுடன் பெரி­து­ப­டுத்திப்  பார்த்­தால்தான் பேன்­களின் முட்­டைகள்   இருப்­பதைக் கண்­டு­பி­டிக்க முடியும்.

இதற்­கான சிகிச்சை ரொம்­பவே சவா­லா­னது என்­றாலும் சாத்­தி­ய­மா­ன­துதான். குழந்­தைகள் கண்­களை அடிக்­கடி தேய்த்துக் கொண்டே இருப்­பார்கள்.

இமை முடி­களில் வெள்ளை வெள்­ளை­யாகத் தெரியும். படிப்பில் கவனம் இருக்­காது.

மருத்­து­வ­ரிடம் காட்­டினால் மேலே சொன்ன விஷ­யங்­கள்தான் காரணம் என்­பது தெரிய வரும். இவை எல்­லா­வற்­றுக்கும் அந்­த­ரங்க சுத்­தமும் சுகா­தா­ரமும் மிக முக்­கியம்.

தலையில் பொடுகு இருந்தால் அதை சரி­யாக்க பிரத்­யேக ஷாம்பு உப­யோ­கித்து சரி செய்ய வேண்டும்.

கண் இமை முடி­யையும் பேபி ஷாம்பு    உப­யோ­கித்து சுத்தம் செய்ய வேண்டும்.

கண் மருத்­துவர் பரிந்­து­ரைக்­கிற மருந்­து­களை முறை­யாகப் பயன்­ப­டுத்த வேண்டும். அலர்­ஜியை உண்­டாக்­கக்­கூ­டிய உண­வு­க­ளையும் பிற விஷ­யங்­க­ளையும் தவிர்க்க வேண்டும்.

குழந்­தை­களை டூ வீலரில் கூட்டிச் செல்லும் போது முன் பக்­கத்தில் உட்­கார வைக்­கக்­கூ­டாது.

நடுவில் உட்­கார வைக்க வேண்டும். ரொம்­பவும் குட்டிக் குழந்தை என்றால் தன்னை நோக்கி உட்­கார வைத்துக் கொள்ளலாம்.

குழந்­தைக்கு கூலிங் கிளாஸ் போட்டு அழைத்துச் செல்­லலாம். பிரச்னை சரி­யா­னாலும், மருத்­துவர் ஆலோ­ச­னைக்கு வரச் சொன்ன தேதியில் போக வேண்டும்.

சரி­யாகி விட்­டதே என அலட்­சி­ய­மாக விடக்­கூ­டாது.

சில நேரங்­களில் இதிலும் நீண்ட காலப் பிரச்­னைகள் வரலாம்.அலர்­ஜி­யினால் கரு­வி­ழி­கூட பாதிக்­கப்­ப­டலாம். அதை Keratitis என்­கிறோம். அடுத்து மிக அரி­தாக, அலர்­ஜியா, மெட்ராஸ் ஐ பிரச்­னையா என்­கிற குழப்­பம்­கூட வரலாம்.

மெட்ராஸ் ஐ என்­பதும் ஒரு­வ­கை­யான அலர்­ஜிதான். அது  அடினோ வைரஸ் என்­கிற தொற்­றினால் வரு­வது. சில நேரங்களில் பாக்­டீ­ரி­யாவும் சேர்ந்து தொற்றை உரு­வாக்­கலாம்.

கண்கள் பாதியோ, முழு­வ­து­மா­கவோ வீங்­கலாம். கண்­களில் இருந்து மஞ்சள் நிறக் கசிவு வரலாம். கண்கள் சிவந்து போகலாம்.

இப்­போது வரும் மெட்ராஸ் கரு­வி­ழி­க­ளையும் பாதிக்­கி­றது. சுய மருத்­துவம் கூடாது. மருத்­து­வரைப் பார்த்து அவர் சொல்­கிற நாட்கள் வரை மருந்­து­களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தனி சோப், தனி டவல் என அதி­க­பட்ச சுகா­தாரம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இது குழந்­தைகள், பெரி­ய­வர்கள் என எல்­லோ­ருக்கும் வரும். குறிப்­பாக திடீ­ரென மழை பெய்து, நின்றால் நிறைய பேருக்கு இந்தப் பிரச்சி­னையைப் பார்க்­கலாம்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com