குறித்த பெண் நேற்று மாலை (16.02.2020) வீட்டில் இருந்த சமயம் அவரது கணவரின் உறவினர் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த அஸ்மா வயது 30 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.