Site icon ilakkiyainfo

கத்தி டீசர்: நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளம்பரத்தின் அப்பட்ட காப்பி?

விஜய் நடிக்கும் கத்தி படத்தின் முதல் தோற்ற டீசர் மற்றும் போஸ்டர், உலகின் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளம்பரத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டவை என இன்று பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விஜய் பிறந்த நாளையொட்டி நேற்று கத்தி படத்தின் விளம்பர டிசைன்கள், டீசர் வெளியாகின.
23-1403517927-kaththi-poster-copy-from-the-word-movie1-600
போஸ்டர் காப்பி
நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளின் தொகுப்பில் விஜய் உருவம் தெரிவது போல இந்த போஸ்டர் டிசன் செய்யப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் வெளியான கையோடு, சர்ச்சையும் கிளம்பிவிட்டது. இந்தப் போஸ்டர் ஏற்கெனவே தி வேர்டு என்ற ஆங்கிலப் படத்துக்காக உருவாக்கப்பட்ட டிசைனை ஒத்திருந்தது.

டீசரும் காப்பி
போஸ்டர்தான் இப்படி என்றால், படத்துக்காக உருவாக்கப்பட்ட டீசரும் காப்பி என டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட நாளிதழ்கள் செய்திவெளியிட்டுள்ளன.

கத்தி டீசர் இது
கத்தி டீசரில், சென்னை மாநகரில் உள்ள கட்டடங்கள், பாலங்கள், சாலைகள் அனைத்தையும் அப்படியே செய்தித் தாள் வடிவில் காட்டியிருந்தனர். இது புதிதாக இருக்கிறதே என பலரும் பாராட்டினர்.

நியூயார்க் டைம்ஸின் காப்பி
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த டீசர், உலகப் புகழ்பெற்ற ஒரு விளம்பரத்தின் அப்பட்ட காப்பி என்பது அம்பலமாகிவிட்டது. அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் – சபா நியூஸ்பேப்பர் டிவி, அமெரிக்கா முழுவதையும் செய்தித்தாள் பாணியில் தங்கள் விளம்பரத்தில் காட்டியிருந்தனர். 2010-ல் இந்த விளம்பம் வெளியானது.

துப்பாக்கியிலும்..
ஏற்கெனவே விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி படத்தின் முதல் போஸ்டர் வெளியானபோது, அது ரிச்சர்ட் கெரே நடித்த ஆன் ஆபீசர் அன்ட் ஜென்டில்மேன் பட போஸ்டரின் காப்பி என்பது அம்பலமானது நினைவிருக்கலாம். 
கத்தி டீசர் வீடியோ

Exit mobile version