பியான்ங்யாங், வட கொரியா: வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன் கடந்த பல வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கிறார்.
இதனால் அவர் என்ன ஆனார், எங்கே போனார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அவர் என்ன ஆனார், எங்கே இருக்கிறார் என்பது வட கொரியாவில் யாருக்குமே தெரியவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.
அவர் பொது இடத்தில் தோன்றி பல வாரமாகி விட்டதாம். வட கொரிய அரசின் முக்கிய உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் கூட இந்த கிம் ஜோங் உன் கலந்து கொள்ளாததால் பல சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன.
நாடாளுமன்றத் திறப்புக்கும் வரலையே
வட கொரிய நாடாளுமன்றம் மீண்டும் திறகப்பட்ட நிகழ்ச்சியிலும் கூட 31 வயதான கிம் கலந்து கொள்ளவில்லை.
உடம்புக்கு ஏதாச்சும்
கிம்முக்கு 31 வயதுதான் என்றாலும் கூட அவர் ஓவர் வெயிட்டுடன் இருப்பவர். அவர் சுவிட்சர்லாந்தில் படிக்கும் போது எப்போது பார்த்தாலும் வெண்ணெய், பாலாடைக் கட்டி உள்ளிட்டவற்றை விரும்பிச் சாப்பிடுவார். இதனால் எடை கூடி விட்டது. இதனால் அவர் பல உடல் உபாதைகளாலும் கூட அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

உன்னிப்பாக கவனிக்கும் தென் கொரியா
கிம் என்ன ஆனார், எங்கே போனார் என்பது குறித்து மற்றவர்களை விட அருகில் இருக்கும் தென் கொரியதான் மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறது. உளவாளிகளையும் அது முடுக்கி விட்டுள்ளது.
கிம் என்ன ஆனார், எங்கே போனார் என்பது குறித்து மற்றவர்களை விட அருகில் இருக்கும் தென் கொரியதான் மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறது. உளவாளிகளையும் அது முடுக்கி விட்டுள்ளது.
அப்பா இறந்த பிறகு
2011ம் ஆண்டு கிம்மின் தந்தை கிங் ஜோங் இல் மரணமடைந்தார். அதன் பிறகு வட கொரியாவை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார் கிம்.
செப்டம்பர் 3 முதல் மிஸ்ஸிங்
கிம் செப்டம்பர் 3ம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 3ம் தேதி தனது மனைவியுடன் கச்சேரி ஒன்றில் கலந்து கொண்டார். அதுதான் கடைசி.. அதற்குப் பிறகு ஆளையே காணவில்லை.
நடக்கக் கூட முடியலையாமே
சமீப காலமாக நடக்கக் கூட முடியாமல் கிம் அவதிப்பட்டு வந்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது. எனவே அவருக்கு சீரியஸான உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
ஆனால் கிம் இப்படி திடீரென காணாமல் போவது புதிதல்ல. கடந்த 2012ம் ஆண்டில் கூட அவர் 2 வாரம் காணாமல் போய் விட்டார். பின்னர் திடீரென திரும்பி வந்தார். எங்கே போயிருந்தார் என்பதை அவரும் விளக்கவில்லை.
ஏன் சார் காணாமல் போனீங்க என்று யாரும் கேட்கவும் இல்லை. காணாமல் போனவருக்குத் திரும்பி வரத் தெரியாமலா போகும்.. வரட்டும்.. வெயிட் பண்ணிப் பார்ப்போம்.