கறுப்பினப் போராளிக்கு கௌரவ விருது!

பிரான்சின் மதிப்பிற்குரிய பெண்ணாக மதிக்கப்படும் சிமோன் வெய் நினைவாக முதன் முறையாக, Le Prix Simone Veil விருது வழங்கப்பட்டுள்ளது.
கமெரூனிலும், அதன் அண்டைய கறுப்பின நாடுகளிலும், குழந்தைத் திருமணத்திற்கு எதிரானக் போராடிவரும், கறுப்பினப் பெண் போராளியான Aissa Doumara Ngatansou இற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விருது எலிசே மாளிகையில் சர்வதேசப் பெண்கள் தினமான நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விழாவில் ஆண் பெண்களிற்கிடையிலான சமன்பாடுகளிற்கான அமைச்சகத்தின் அரசாங்கச் செயலாளர் மார்லேன் சியாப்பா, மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜோன்-ஈவ் லூதிரியான், சுகாதாரம் மற்றும் சமத்துவத்திற்கான அமைச்சர் அன்யேஸ் புசின் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment