ilakkiyainfo

கறுப்பு பணத்தை சுத்திகரிக்கவா தொலைக்காட்சி நடத்தினார் யோஷித்த!!

கறுப்பு பணத்தை சுத்திகரிக்கவா தொலைக்காட்சி நடத்தினார் யோஷித்த!!
February 06
14:53 2016

இலங்­கையில் இன்று(பேசப்படு கின்ற) பிர­தான விடயமாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் மக­னான யோஷித்த ராஜ­பக் ஷ. கடற்­ப­டையின் லெப்­டினன்ட் தர நிலை அதி­கா­ரி­யான அவர் சூட்­சு­ம­மாக முன்­னெ­டுத்த கறுப்புப் பண சுத்திகரிப்பு நட­வ­டிக்­கையால் இன்று சிறையில் உள்ளார். அத­னா­லேயே அவர் தொடர்பில் இன்று அனை­வரும் பேசவேண்­டிய கட்­டா­யத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

கடந்த 2015 மார்ச் மாதம் 15 ஆம் திகதி சமூக நீதிக்­கான மக்கள் அமைப்பு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோ­னிடம் எழுத்து மூலம் முறைப்­பா­டொன்றை அளித்­தது.

அந்த முறைப்­பாட்டில் கல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் (சி.எஸ்.என்.) தொலைக்­காட்சி நிறு­வனம் கறுப்புப் பணத்தை சுத்­தி­க­ரிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அரச சொத்­துக்­களை அந் நிறு­வனம் துஷ்­பி­ர­யோகம் செய்துள்ளதா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் இது குறித்த விசா­ர­ணை­களை செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோ­னினால் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கா­ர­விடம் பாரப்படுத்தப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்தே சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வனம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கா­ரவின் நேரடி கண்­கா­ணிப்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தி­யட்­சகர் ஒரு­வரின் கீழான விசேட குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டது முதல் கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு பீ 9823 / 2015 எனும் இலக்­கத்தின் கீழ் அறிக்கையும் சமர்­ப்பித்த நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விரி­வான விசா­ரணை ஒன்­றினை நடத்­தி­யது.

பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் தலை­வ­ராக செயற்­பட்ட முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செய­லாளர் ரொஹான் வெலி­விட்­டவை நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைத்து விசாரணைக்கு உட்­ப­டுத்­தவும் ஏனைய பணிப்­பா­ளர்­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தவும் பொலிஸார் தவ­ற­வில்லை.

அத்­துடன் அந்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக கடு­வலை நீதி­வா­னிடம் பெற்றுக்கொண்ட அனு­ம­தி­யுடன் பத்­த­ர­முல்­லையில் உள்ள சி.எஸ்.என். நிறு­வ­னத்தின் தலைமை அலு­வ­ல­கத்­தையும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சோத­னை­யிட்­டனர்.

இதன் போது பல்­வேறு சான்­று­களை மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்­த­துடன் இந்த விசா­ர­ணை­களின் போது கணினி தொடர்­பி­லான விசேட நிபு­ணர்­க­ளையும் தமக்கு உத­வி­யாக பயன்­ப­டுத்திக் கொண்டனர்.

இந்த விசா­ர­ணை­களின் இடை நடுவே ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்த சி.எஸ்.என். தொலைக்­காட்சி தொடர்பில் பயன்­ப­டுத்­தப்­பட்ட அறை ஒன்றும் பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அந்த அறையில் இருந்து சி.எஸ்.என். நிறு­வனம் தொடர்­பி­லான பல்­வேறு ஆவ­ணங்கள் சிக்­கிய நிலையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் காலத்தில் ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்­குள்­ளேயே சி.எஸ்.என். அலு­வ­லகம் இயங்­கி­வந்­துள்­ளது இதன் போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த ஒவ்­வொரு விசா­ர­ணை­களின் போதும் ஏற்­பட்ட முன்­னேற்றம் தொடர்பில் சுமார் 20 மேல­திக அறிக்­கைகள் கடுவலை பிர­தான நீதிவான் தம்­மிக ஹேம­பா­ல­வுக்கு நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இதன் தொடர்ச்­சி­யா­கவே சி.எஸ். என். விவ­காரம் தொடர்பில் சந்­தேக நபர்கள் அறு­வரை அடை­யாளம் கண்­டி­ருந்த நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் கடந்த சனி­யன்று அவர்­களை கைது செய்ய தீர்­மா­னித்­தனர்.

குற்­ற­வியல் சட்­டத்தின் 32 ஆவது அத்­தி­யா­யத்தின் அடிப்­ப­டை­யிலும் தண்­டனை சட்டக் கோவையின் 109(5) உப அத்தியா­யத்தின் கீழும் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ருக்கு உள்ள பொறுப்­புக்கு அமை­வாக சாதா­ரண சட்ட திட்டங்களின் பிர­காரம் அடை­யாளம் காணப்­பட்ட ஆறு சந்­தேக நபர்­களின் ஐவர் கைது செய்­யப்­பட்­டனர்.

யோஷித்த ராஜ­பக் ஷ, ரொஹான் வெலி­விட்ட, நிஸாந்த ரண­துங்க கவிஷான் திஷா­நா­யக்க, ரவிநாத் பெர்­னாண்டோ ஆகி­யோரே இவ்­வாறு கைது செயப்­பட்­டனர்.

ஷாடியா கரு­ணா­ஜீவ என்ற அந்த தொலைக்­காட்­சியின் பெண் பணிப்­பாளர் நாட்டை விட்டு அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு குறுகிய பயணம் ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் அவரை கைது செய்­வது அன்­றைய தினம் சாத்­தி­ய­மற்றுப் போனது.

எனினும் அவரை நாடு திரும்பும் போது கைது செய்யத் தேவை­யான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.

ரொஹான் வெலி­விட்ட சி.எஸ்.என். நிறு­வ­னத்தின் தலைவர் என்ற ரீதியில் கைது செய்­யப்­பட்ட நிலையில் கவிஷான் திஸா­நா­யக்க, ரவிநாத் பெர்­னாண்டோ ஆகியோர் அதன் பணிப்­பாளர்கள் என்ற ரீதியில் கைது செய்­யப்­பட்­டனர்.

நிஷாந்த ரண­துங்க அதன் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் என்ற நீதியால் கைதானார். இத­னி­டையே சி.எஸ்.என். நிறுவனத்தின் மின்­னஞ்சல் மற்றும் தர­வு­களை ஆய்வு செய்த நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் ரொஹான் வெலிவிட்ட தலை­வ­ராக செயற்­பட்ட போதும் சி.எஸ்.என். நிறு­வ­ன­மா­னது லெப்­டினன்ட் யோஷித்த ராஜ­ப­க் ஷவின் தீர்மா­னங்­க­ளுக்கும் கட்­ட­ளைக்கும் அமை­யவே செயற்­பட்­டுள்­ளதும் அதன் பிர­தா­னி­யாக யோஷித்­தவே செயற்பட்டுள்ளதும் தெரி­ய­வந்த நிலை­யி­லேயே யோஷித்த ராஜ­பக் ஷ கைது செய்­யப்­பட்டார்.

இதற்காக சுமார் 12000 மின்னஞ்சல் தகவல்கள் ஊடாக பொலிஸார் சாட்சியங்களை சேகரித்துள்ளனர்.

கடந்த சனிக்­கி­ழ­மையே முதன் முறை­யாக இந்த விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட யோஷித்த ராஜ­பக் ஷ 6 மணி நேர விசா­ர­ணையின் பின்னர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார்.

வழ­மை­யாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரி­வுக்கு அழைத்தே விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் அந்த விசா­ரணைப் பிரிவு யோஷி­த்தவை மட்டும் கோட்­டையில் உள்ள கடற்­படை தலை­மை­ய­கத்­துக்கு வரழைத்து கடற்­படை அதிகாரிகளின் முன்­னி­லை­யி­லேயே விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி கைது செய்­தி­ருந்­தமை விசேட அம்­ச­மாகும்.

நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவினால் இந்த விவ­காரம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில், சி.எஸ்.என். நிறு­வனம் கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் குற்­ற­மி­ழைத்­துள்­ளமை உறு­தி­யா­கி­யுள்­ளது.

அதன்­படி பொறுப்புக் கூற வேண்­டிய அந் நிறு­வ­னத்தின் அதி­கா­ரிகள் தமது பக்க நியா­யங்­களை சந்­தே­கத்­துக்கு இட­மின்றி பொலிஸார் முன்­னி­லையில் நிரூ­பிக்க தவ­றி­யுள்­ளனர்.

பொலிஸ் விசா­ர­ணை­களின் போது அவர்கள் சந்­தே­கத்­துக்கு இட­மான கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் பதி­ல­ளிக்க தவ­றி­ய­மையே கைதுக்­கான பிர­தான கார­ணி­யாக அமைந்துள்­ளது.

234 மில்­லியன் ரூபா (2340 இலட்சம்) ஆரம்ப மூல­த­னத்­து­ட­னேயே சி.எஸ். என் நிறு­வனம் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளது. எனினும் அந்த மூல­தன மூலங்­களைக் காட்­டு­வ­தற்கு யோஷித்த உள்­ளிட்ட அதன் அதி­கா­ரி­களால் இறு­தி­வரை முடி­யாமல் போய்­விட்­டது.

அதா­வது இந்த 234 மில்­லியன் மூல­த­னத்தில் 7 மில்­லியன் ரூபா 7 இலட்­சத்து நான்கு பங்­கு­களால் கிடைத்­த­தாகும். இதனை நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தமது விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­தனர்.

இதனை தவிர எஞ்­சிய 227 மில்லியன் ரூபா மூல­தனம் எப்­படி பெறப்­பட்­டது என்­பது தொடர்­பி­லான நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசாரணைகளில் அவை சட்ட விரோத கொடுக்கல் வாங்கல் மற்றும் வெளி நாட்டில் சட்ட விரோத செயற்­பா­டுகள் ஊடாக பெறப்­பட்ட பணம் என்­பது தெரி­ய­வந்­தது.

தொடர்ச்­சி­யாக பொரு­ளியல் மற்றும் மத்­திய வங்கி நிபு­ணர்­களின் ஒத்­து­ழைப்­புடன் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு இந்த விவ­காரம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது மேலும் அதிர்ச்சி காத்­தி­ருந்­தது.

அதா­வது வெளிநாட்டு நிறு­வனம் ஒன்­றூ­டாக அனுப்­பப்­பட்ட 2.3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் சி.எஸ்.என். நிறுவனத்தின் ஆரம்ப மூல­த­னத்தில் பிர­தான பங்கு வகிப்­பதே அந்த அதிர்ச்­சிக்குக் கார­ண­மாகும்.

தற்­போது இலங்­கையில் வெளிநாட்டு நிறு­வனம் ஒன்­றினால் முன்­னெ­டுக்­கப்பட்டு வரும் திட்­ட­மொன்றே இந்­த­ளவு பாரிய நிதிப் பரி­மற்­றத்­துக்கு மூல­கா­ர­ண­மாக இருந்­துள்­ளமை இது வரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்படுத்தப்பட்டுள்­ளது.

இதனை விட சி.எஸ்.என். நிறு­வ­னத்­துக்கு இந்­த­ளவு பாரிய தொகை கிடைத்­தமை தொடர்பில் கொடுக்கல் வாங்­க­லுடன் சம்­பந்­தப்பட்­டோர் நிதிக் குற்றப் புல­னாய்வு பிரிவின் முன்­னி­லையில் வழங்­கிய வாக்கு மூலங்­க­ளையும் நிதிச் சான்றுகளையும் வைத்து ஆராயும் போது, பணம் கிடைத்த முறை­மைகள் தொடர்பில் பாரிய சந்­தே­கங்­களை அவை ஏற்படுத்துகின்­றன.

அதனால் சி.எஸ்.என். நிறு­வ­னத்தின் ஆரம்ப மூல­தனம், கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு ஊடாக பெறப்­பட்­டுள்­ளது என்ற அனுமா­னத்­துக்கு வரும் பொலிஸார் அதற்­கான அடிப்­படை சான்­று­க­ளையும் முன்­னி­றுத்­தியே யோஷித்த உள்ளிட்டோரை கைது செய்­துள்­ளனர்.

சி.எஸ்.என். நிறு­வ­னத்தை பொறுத்­த­வரை அதன் ஆவ­ணங்­களின் பிர­காரம், அந் நிறு­வ­னத்தின் ஆரம்ப பங்­கு­தா­ரர்கள் அனை­வரும் ஆரம்பப் பணிப்­பா­ளர்­க­ளாவர்.

அதன்­படி சி.எஸ்.என். நிறு­வன பங்­கு­க­ளுக்கு உரித்­தான அதன் தலை­வ­ராக கூறப்­படும் ரொஹான் வெலி­விட்ட, கவிஷான் திஸா­நா­யக்க, ரவிநாத் பெர்­ணான்டோ மற்றும் ஷாடியா கரு­ணா­ஜீவ ஆகிய நால்­வரும் அதன் ஆரம்பப் பணிப்­பா­ளர்­க­ளாவர். நிறை­வேற்று பணிப்­பா­ள­ராக நிஷாந்த ரண­துங்க செயற்­பட்­டுள்ளார்.

இதன்படியே பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் விசா­ர­ணை­க­ளுக்­காக பெறப்­பட்ட சில கணினி தொடர்­பி­லான சான்­றுகள் மற்றும் சி.எஸ்.என்.இன் மின்­னஞ்சல் ஆகி­ய­வற்றை விரி­வாக ஆராயும் போது சி.எஸ். என். நிறு­வ­னத்தின் தலை­வ­ராக லெப்­டினன்ட் யோஷித்த ராஜ­ப­க் ஷவே செயற்­பட்­டுள்ளார் என்­பது உறுதியாகியுள்­ளது.

அத்­துடன் அந்த நிறு­வ­னத்தின் அத்­தனை முக்­கிய தீர்­மா­னங்­களும் அவ­ரி­னா­லேயே எடுக்­கப்பட்டும் உள்­ளது. இதற்­கான ஆதா­ரங்கள் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்த பின்­ன­ரேயே யோஷித்த உள்­ளிட்டோர் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

அதன்­படி கைது செய்­யப்­பட்ட யோஷித்த உள்­ளிட்ட ஐவரும் கடு­வலை பிர­தான நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் தற்­போது எதிர்­வரும் 11 ஆம் திகதி வரை வெலிக்­கடை சிறை வளா­கத்தில் உள்ள கொழும்பு விளக்க­ம­றியல் சிறையில் ஜே பிரிவில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

யோஷித்த ராஜ­பக் ஷ கடந்த சனி­யன்று மாலை கடு­வலை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டி­ருந்த போது அந்த மன்றின் வளா­கத்தில் பெரும் திர­ளானோர் கூடி­யி­ருந்­தனர்.

மஹிந்த ராஜ­பக்் ஷ, ஷிரந்தி ராஜ­பக் ஷ, நாமல் ராஜ­பக் ஷ, பசில் ராஜ­பக் ஷ, கோத்தபாய ராஜ­பக் ஷ உள்­ளிட்ட ராஜபக்ஷ குடும்­பத்­தா­ருடன் முன்னாள் இந் நாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல­ரையும் நீதி­மன்ற வளா­கத்தில் காண முடிந்தது.

சந்­தேக நபர்­களை பொலி­ஸாரின் கோரிக்­கைக்கு அமை­வாக விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து மஹிந்த, ஷிரந்தி உள்­ளிட்­ட­வர்­களின் கண்­களில் இருந்து கண்ணீர் வடிந்­தது.

மகன் (யோஷித்த) விளக்­க­ம­றி­ய­லுக்கு அனுப்­பப்­ப­டவே, கைது நட­வ­டிக்கை ஒரு அர­சியல் பழி­வாங்கல் என ஏட்­டிக்கு போட்­டி­யாக ராஜ­பக் ஷ குடும்­பத்­தாரும் பொது எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தொடர்ச்­சி­யாக குர­லெ­ழுப்ப ஆரம்­பித்­தனர்.

அதன்­படி அவர்கள் ஒவ்­வொரு நாளும் கொழும்பு விளக்­க­ம­றியல் நோக்கி யோஷி­த் தவை பார்­வை­யிட படை­யெ­டுத்­த­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.

வெளிநாட்டு அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் அழுத்தம் கார­ண­மா­கவே அவர்­க­ளு­ட­னான சந்­திப்பின் பின்னர் யோஷித்த கைது செய்­யப்­பட்­ட­தாக மஹிந்த ராஜ­பக் ஷ உத்­தி­யோ­க­பூர்வ அறிக்கை ஒன்­றூ­டாக இந்த சம்­பவம் தொடர்பில் அதிருப்தி வெளி­யிட்­டி­ருந்தார்.

தனது குடு­ம்பத்­தாரை பழி­வாங்கும் படலம் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­தாக அவர் குறிப்­பி­டு­கின்றார்.

இந்த விவ­காரம் ஒரு அர­சியல் பழி வாங்கல் அல்ல என ஆளும் தரப்பும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் தொடர்ச்சியாக வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இத­னி­டையே யோஷித்த ராஜ­பக் ஷ கடற்­ப­டையில் இணைந்­து­கொண்ட விதம் குறித்தும் கேள்வி எழுப்­பப்­பட்­டுள்ள நிலையில், அது தொடர்பில் பாது­காப்பு அமைச்சு பிரத்­தி­யேக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

முப்­ப­டை­களைப் பிரதி நிதித்துவம் செய்வோர் தனியார் நிறு­வ­னங்­களின் உயர் பத­வி­களில் பதவி வகிக்க முடி­யாது என்ப­துடன் அவர்­க­ளுக்கு வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட முடி­யாது என்­பது சட்­ட­மாகும்.

அப்­ப­டி­யாயின் சி.எஸ்.என். நிறு­வ­னத்தில் யோஷித்த வகித்­துள்ள பங்கு குறித்து கடற்­ப­டையும் தற்­போது விசாரணைகளை ஆரம்­பித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

எவ்­வா­றா­யினும் யோஷித உள்­ளிட்­ட­வர்கள் பிர­தா­ன­மாக கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு தொடர்பில் கைதா­னாலும் மேலும் பல குற்றச்சாட்­டுக்­களும் சுமத்­தப்பட்­டுள்­ளது.

பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­க­ரவின் தக­வல்­க­ளுக்கு அமை­வாக யோஷித்த உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் மீது நம்­பிக்­கையை உடைத்த குற்றம், சுங்கச் சட்­டத்தை மீறிய குற்றம், நிறு­வன சட்­டத்தை மீறிய குற்றம், அரச சொத்­துக்­களை முறை­யற்ற விதத்தில் பயன்­ப­டுத்­தி­யமை உள்­ளிட்ட 6 குற்றச்சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் இவர்­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை நிறைவில் மேல் நீதி­மன்றில் வழக்குத் தொடர நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஊடாக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்ள நிலையில், மேல­திக விசா­ர­ணை­களை தடையின்றி முன்­னெ­டுக்­கவே யோஷித்த உள்­ளிட்டோர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­விக்­கின்றார்.

இத­னி­டையே யோஷித்த உள்­ளிட்டோர் கைது செய்­யப்­பட காரணமாக அமைந்த கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­ட­மா­னது 2006 ஆம் ஆண்டு கொண்டு­வ­ரப்­பட்­ட­தாகும்.

2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்­ட­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் இந்த கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்­துக்கு 2011 ஆம் ஆண்டில் திருத்­தங்­களும் செய்­யப்­பட்­டன.

அதன்­படி அந்த சட்­டத்தின் மூன்­றா­வது அத்­தி­யா­ய­மா­னது கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு தொடர்­பி­லான குற்­றங்கள் தொடர்பில் தெளி­வாக விளக்­கு­கின்­றது.

நேர­டி­யா­கவோ வக்­கி­ர­மா­கவோ சட்ட விரோத நட­வ­டிக்கை ஒன்­றூடாக சம்­பா­திக்­கப்­பட்ட சொத்­தொன்றை அல்­லது பணத்தை தெரிந்­து­கொண்டு அல்­லது தெரிந்­து­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் இருந்த நிலையில் அதனை நாட்­டுக்குள் கொண்டு வரு­வதை அல்­லது பயன்­ப­டுத்­து­வதை இச்­சட்டம் குற்­ற­மாக சொல்­கி­றது.

அத்­துடன் இவ்­வாறு சட்ட விரோ­த­மாக உழைக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளையோ பணத்­தையோ பொறுப்­பேற்றல், அதனை பரா­ம­ரித்தல், மறைத்து வைத்தல், வெளிநா­டொன்­றுக்கு அனுப்­புதல், வெளிநாட்­டி­லி­ருந்து கொண்டு வருதல், முத­லீடு செய்தல், உள்­ளிட்ட அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் இச்­சட்டம் தடைசெய்­கி­றது.

கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் இரண்டாம் அத்­தி­யா­யத்தின் பிர­காரம், இது தொடர்­பி­லான வழக்­கா­னது மேல் நீதிமன்றம் ஒன்­றூ­டா­கவே விசா­ரணை செய்­யப்­ப­ட­வேண்டும் என்­பதை குறிப்­பி­டு­வ­துடன் அதில் குற்­ற­வா­ளி­யாக காணப்­ப­டு­ப­வ­ருக்கு மோசடி செய்­யப்­பட்ட சொத்தின் அல்­லது பணத்தின் பெறு­ம­தியில் குறை­யாத, அதன் மூன்று மடங்கிற்கு மேற்­ப­டாத தண்டப் பணத்­தையும் 5 வரு­டங்­க­ளுக்கும் 20 வரு­டங்­க­ளுக்கும் இடைப்­பட்ட சிறைத் தண்டனையையும் அல்­லது தண்டம், சிறைத் தண்­ட­ணை­யையும் வழங்க சட்டம் பரிந்­துரைச் செய்­கின்­றது.

அதனைவிட கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் மிக முக்கியமான இரு விடயங்கள் அதன் 4 ஆம் மற்றும் 5 ஆம் அத்தியாயங்களில் உள்ளன.

அதாவது 4 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் குறித்த சந்தேக நபருக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டால், அவர் தன்னிடம் உள்ள குறித்த சந்தேகத்துக்கு இடமான அந்த சொத்து அல்லது பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதை கண்டிப்பாக நிரூபித்தே ஆகவேண்டும்.

அவ்வாறு நிரூபிக்காவிடில் அது கறுப்புப் பண சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே கொள்ளப்படும். அதே போன்று­ 5 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம், யாரேனும் ஒருவர் கறுப்புப் பண சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பதை தெரிந்தும் அதனை ஒருவர் மறைத்தால், அவ்வாறு மறைக்கும் நபருக்கு எதிராகவும் மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து 50 ஆயிரம் ரூபா வரையிலான தண்டப் பணம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை வழங்க சட்டம் பரித்துரைத்துள்ளது.

இத்தனை கட்டுப்பாடுகளும் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தை பேணும் விதமாகவும் சட்ட விரோத நிதி கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்தவுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் அதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியமே.

யோஷித்த உள்ளிட்டோருக்கு எதிராக இப்போதுள்ள குற்றச்சாட்டு சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தை ஆரம்பிக்க பயன்படுத்தப்பட்ட 234 மில்லியன் ரூபாவை எப்படி சம்பாதித்தனர் என்பதேயாகும்.

–எம்.எப்.எம்.பஸீர்–

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com