ilakkiyainfo

கலவி (காதல்) குளம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாருங்கோ.. “கலவி” குளத்தில் நீச்சலடித்து குளிக்கலாம்!! – (படங்கள்)

கலவி  (காதல்) குளம் பற்றி  கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  வாருங்கோ.. “கலவி”  குளத்தில்  நீச்சலடித்து  குளிக்கலாம்!! – (படங்கள்)
August 07
12:20 2016

 நீங்கள்  “கலவி” யில்  மூழ்கி   ஆசைதீர  நீச்சலடித்து குளித்தீா்களோ?  இல்லையோ?  ஆனால்..   இந்தக்காதல் “கலவி”க்  குளத்தில் கட்டாயம்  நீச்சலடித்து குளிக்கலாம் வாருங்கோ…

பச்சைப்பசேலென இருக்கும் வயல்வெளிகளுக்கு மத்தியில் பளிச்சென தெரிகிறது அந்தக்காதல் “கலவி” குளம். தமிழகத்தில் எங்கும் காணக்கிடைக்காத காதற்களியாட்டக் காட்சிகள் இக்குளத்தில் காணமுடிகிறது.

குளத்தின் படிக்கட்டுகளில் இந்த காதற்களியாட்டக் காட்சிகள் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன.

கிணறு மாதிரி ஆழமாக இருக்கும் அக்குளத்தின் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் இப்படி சிற்பங்கள் செதுக்கிவைக்கப்பட்டுள்ளனவாம். தண்னீரில் மூழ்காத பாகங்கள் வாழ்க எனச் சொல்லியபடி, தெரிந்த படிக்கட்டுகளில் உள்ள சிற்பங்கள் கேமராவில் ‘கிளிக்’ ஆனது.

3ஆண் – பெண் புணர்வது, ஒரு ஆண் பல பெண்களுடன் புணர்வது, ஒரு பெண் பல ஆண்களுடன் புணர்வது, விலங்குகளுடன் புணர்வது என கலங்கடிக்கிறது அந்தக் காதல்குளம்.

சின்னையன் என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆண்டுவந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகள். ஆனால் அவள் திருமணத்தின் மீதே நாட்டம் இல்லாமல் இருந்தாள்.

எத்தனையோ இளவரசர்கள் வந்தபோதும், மறுத்துவந்தாள். திருமணம் என்றாலே வெறுத்து ஒதுக்கினாள்.

4இப்படியே போனால், தனக்கு பிறகு இந்த ராஜ்ஜியத்தை ஆள ஒரு இளவரசன் இல்லாமல் போய்விடுமே என மனவருத்தத்தில் இருந்தான் சிற்றரசன்.

அரண்மனைத்தோழிகள் மூலமாக காதல்,திருமணம் பற்றியெல்லாம் மகளுக்கு புரியவைக்க முயற்சித்தான். அத்தனையும் தோல்வியில் முடிந்தன.

5

அந்த சமயத்தில்  அமைச்சர்கள்  சின்னையனிடம் ஒரு யோசனை கூறினர். ஒரு அழகான குளம் அமைத்து, அந்த குளத்தில் உள்ள நான்கு பக்கங்களிலும் காதல் களியாட்டக்காட்சிகளை சிற்பமாக அமைத்தால், அதை பார்த்து காதல் கொள்வாள் என்று அறிவுரை கூறினர்.

a (2)

அதன்படியே ஆகட்டும் என சின்னையன் சொல்லவும், இம்மாதிரி சிற்பங்கள் செதுக்கப்பட்டது. குளிக்கப்போனபோது ராணியும் காதல் கொண்டாள்.

திருமணம் செய்துகொண்டாள் என சின்னையன்பேட்டை மக்கள் இக்குளத்திற்கு ஒரு கதை சொல்லுகிறார்கள்.

6

இன்னும் சிலரோ, நாலு சுவற்றுக்குள்ளேயே வளர்ந்த ராணிக்கு கல்யாணம், சடங்கு பற்றியெல்லாம் எதுவும் தெரியவில்லை.

அதனால் திருமணம் ஆகப்போன இடத்தில் முதலிரவுக்கு சம்மதிக்கவில்லை. பொறுத்து பொறுத்துப்பார்த்த இளவரசன், நீங்களாச்சு, உங்கள் மகளாச்சு, என்று சின்னையனிடம் விட்டு விட்டு போய்விட்டான்.

அப்போது என்னை செய்வது, மகளுக்கு அந்த எண்ணம் வரவைப்பது எப்படி, தந்தை எப்படி அவளிடம் சென்று இது பற்றி விளக்க முடியும் என்று குழம்பியிருந்த நேரத்தில் தோழிகள் மூலமாக உணர்த்த முயற்சித்தான்.

அது தோல்வியில் முடிந்ததும் கவலையில் இருந்தவனுக்கு அமைச்சர்கள் சொன்ன ஆலோசனையின்படி இக்குளத்தை அமைத்தான். குளிக்கும்போது இக்குளத்தில் இருந்த சிற்பங்கள் அவளுக்கு அந்த எண்ணத்தை தூண்டிவிட்டது.

உடனே அவள் இளவரசனை தேடிச்சென்று, இன்பமாக குடித்தனம் நடத்தி பிள்ளைகள் பெற்றுக்கொண்டாள் என்று இன்னொரு கதை சொல்லுகிறார்கள்.

a (3)

அவ்வூரின் பட்டதாரிகள் சிலரோ, செக்ஸ் கல்வியின் அவசியத்தை அந்தக்காலத்திலேயே உணர்ந்த அரசன், பொதுமக்களுக்காக இப்படி ஒரு குளத்தை கட்டியிருக்கிறான் என்கிறார்கள்.

7

எது எப்படியே தமிழகத்திற்கு ஒரு அரிய குளம் கிடைத்திருக்கிறது.  இந்தக்குளத்தின் படிக்கட்டுகள் மற்றும் சுற்றுச்சுவர்களில் பூக்கள், விலங்குகள், பறவைகள், கடவுள்களின் உருவங்களும், ராமாயணம், மகாபாரத காட்சிகளும், இயற்கைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

8வழித்தடம் :

அந்த குளம் திருவண்ணாமலையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தானிப்பாடி என்ற ஊருக்கருகில் சின்னையன்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது. அந்த குளத்தை சின்னையன் குளம் என்றும் அழைக்கின்றனர். திருவண்ணாமலையில் இருந்து பேருந்து வசதி உண்டு.

இந்த குளத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் சாத்தனூர் அணை உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com