ilakkiyainfo

கல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்!

கல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்!
January 07
23:48 2019

சென்னை: கல்யாணம் ஆன பெண் எஸ்ஐ-யின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி தாலி கட்ட முயன்ற போலீஸ் இப்போது புழலில் கம்பி எண்ணி கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வருபவர் மணிமேகலை. 24 வயதாகிறது. நுங்கம்பாக்கம் போலீஸ் குடியிருப்பிலேயே வசித்து வருகிறார்.

இதற்கு முன்பு இவர் காட்பாடியில் பயிற்சி எஸ்.ஐ,.யாக பணியாற்றி வந்திருக்கிறார். அந்த சமயத்தில், அங்கு ஊர் காவல் படை காவலராக கூடவே வேலை பார்த்தவர் பாலசந்திரன்.

இவருக்கு மணிமேகலையை பிடித்து போகவே அடிக்கடி சந்தித்துபேசி வந்திருக்கிறார். கொஞ்ச நாளில் பாலசந்திரனுக்கு மணிமேலை மீது ஒருதலை காதல் பிறந்தது.

கண்டித்த மணிமேகலை தன் காதலை மணிமேகலையிடம் சொல்லாமலே வந்துள்ளார். ஆனால் சிறிது நாளில் மணிமேகலைக்கு வேறு ஒரு இடத்தில் கல்யாணம் ஆகிவிட்டது.

ஆனாலும் பாலச்சந்திரன் மணிமேகலையை அடிக்கடி நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனை எத்தனையோ முறை மணிமேகலை கண்டித்து சொல்லிவிட்டார். ஆனால் பாலச்சந்திரனுக்கு மணிமேகலையை மறக்க முடியவில்லை.

அதனால் நேற்று டியூட்டியில் மணிமேகலை இருந்தபோதும் போன் செய்து “காதல் டார்ச்சர்” தந்தார் பாலச்சந்திரன்.

இதனால் நேரில் வரவழைத்து வார்னிங் கொடுக்கலாம் என்று மணிமேகலை எழும்பூருக்கு பாலச்சந்திரனை வரவழைத்தார். பாலச்சந்திரனும், மணிமேகலை கூப்பிட்டதும் என்னவோ ஏதோ என்று கற்பனை பண்ணிக்கொண்டு ஓடிவந்தார்.

அப்போது மணிமேகலை பாலச்சந்திரனிடம், தனக்கு காதலில் விருப்பம் இல்லை என்றும், ஏற்கனவே கல்யாணம் ஆனதை பற்றியும் சொல்லி எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தார்.

பிறகு திடீரென பாலசந்திரன் ஒரு பக்கம் மணிமேகலையின் கழுத்தில் கத்தியை வைத்துகொண்டு, மற்றொரு கையில் தாலி எடுத்து கட்ட போனார்.

இதை பார்த்ததும் பதறிபோன மணிமேகலை கூச்சல் போட்டதும், போலீசார் விரைந்து சென்று பாலசந்திரனை மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து மணிமேகலை எழும்பூர் ஸ்டேஷனில் புகாரும் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன், புழல் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com