மட்டக்களப்பு, கல்லடி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க காரியாலத்திற்கருகில்  உள்ள ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியை காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்போதும் குறித்த சிறுமியை காப்பாற்ற முடியாமல் போனது.

இதனையடுத்து குறித்த சிறுமியின் சடலத்தை ஆற்றில் தேடிவந்த நிலையிலேயே இந்த சடலம் ஆற்றில் கரை ஓதுங்கிய நிவையில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பூநொச்சிமுனை வீதி 2 குறுக்கு வீதியைச்  சேர்ந்த 16 வயதுடைய  சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார்.