ilakkiyainfo

கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்­ணுக்கு தான் வாங்கிக் கொடுத்த கரு­வாட்டை மீளப் பெற்றுத் தரு­மாறு பொலிஸில் முறை­யிட்ட 65 வயது நபர்!

கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்­ணுக்கு தான் வாங்கிக் கொடுத்த கரு­வாட்டை மீளப் பெற்றுத் தரு­மாறு பொலிஸில் முறை­யிட்ட 65 வயது நபர்!
January 10
22:25 2018

தம்மை வீட்டை விட்டு விரட்­டி­ய­டித்த கள்ளக் காத­லி­யி­ட­மி­ருந்து தமது உடை­மை­க­ளையும் தான் இறு­தி­யாக வாங்கிக் கொடுத்த கட்டா கரு­வாட்­டையும் மீளப் பெற்­றுத்­த­ரும்­படி 65 வய­தான நபர் ஒருவர் கட்­டு­கஸ்­தோட்ட பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்த நபர் பிலி­மத்­த­லாவ, கிரா­கம பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர். இவர் கட்­டு­கஸ்­தோட்ட பிர­தே­சத்­தி­லுள்ள விகாரை ஒன்றில் தங்­கி­யி­ருந்து அங்கு வசித்த பிக்­குவின் வேலை­களைச் செய்து வந்­துள்ளார்.

இந்த நிலையில் இந்த 65 வயது நப­ருக்கு ரண­வண பிர­தே­சத்தைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ருடன் கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்­டுள்­ளது. பின்னர் இரு­வரும் கட்­டு­கஸ்­தோட்ட ரண­வண வீதியில் வீடு ஒன்றை வாட­கைக்குப் பெற்று குடி­யி­ருந்­துள்­ளனர்.

இக்­கால கட்­டத்தில் இரு­வ­ருக்­கு­மி­டையே அடிக்­கடி சச்­ச­ரவு ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் இந்த நபரை கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்த பெண் வீட்­டை­விட்டு விரட்­டி­ய­டித்­துள்ளார்.

பின்னர் இந்த நபர் கட்­டு­கஸ்­தோட்ட பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்த பெண்­ணுடன் தாம் தொடர்ந்து வாழ நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறும் அவ்­வாறு இல்­லா­விட்டால் அந்த வீட்­டி­லுள்ள தமது உடை­மை­க­ளையும் இறு­தி­யாக தாம் அப்பெண்­ணுக்கு வாங்­கிக்­கொ­டுத்த கட்டா ரக கரு­வாட்­டையும் பெற்­றுத்­த­ரு­மாறும் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இதன்­படி இந்த நப­ருடன் கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்த பெண்ணை தேடிச்­சென்ற பொலிஸார் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துவந்து அவரிடமிருந்த 65 வயதான நபரின் கட்டா கருவாடு உட்பட உடைமைகளை அந்த நபரிடம் ஒப்படைக்கும்படி தெரிவித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com