நம் விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தை சில சமயம் கழட்ட முடியாமல் போய்விட்டால் நாம் படும் கஷ்டத்தை சொல்லி முடியாது. கையில் சோப்பு போட்டு மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அந்த மோதிரத்தை கழட்டுவோம். இதற்காக சிலசமயம் சிலமணி நேரங்கள் கூட ஆகலாம்.
ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒருவர் விரலில் டைட்டாக இருக்கும் மோதிரத்தை எப்படி மிக எளிதாக கழட்டுவது என்பது குறித்த ஒரு விளக்கத்தை வீடியோவாக எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இந்த விளக்க வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட சிலமணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் மற்றவர்களுக்கு பகிரப்பட்டு சாதனை படைத்துள்ளது. முதலில் ஒரு உறுதியான நூல் ஒன்றை எடுத்து ஒரு முனையை மோதிரத்தின் உள்ளே நுழைக்கின்றார்.
பின்னர் மறுமுனையை மெதுவாக விரலின் மீது சுற்றுகிறார். பின்னர் முதலில் உள்ளே நுழைத்த முதல் முனையை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுக்கும்போது மிக எளிதாக கழட்ட முடியாத மோதிரம் வெளியே வருகிறது.
இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் 4,795 பேர்களுக்கு பகிரப்பட்டது, சுமார் 8,098 லைக்குகள் பெற்றது. அதுமட்டுமின்றி 278 கமெண்ட்டுக்கள் வந்தது. இவையனைத்தும் ஒரே மணி நேரத்தில் கிடைத்தது ஆகும். இன்னும் ஏராளமானோர் லைக்குகள் போட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்த அபூர்வ வீடியோவை தேடிப்பார் இணையதள வாசகர்களுக்காக இதோ அளிக்கின்றோம்.