ilakkiyainfo

காணிக்குள் நீர் செல்வது தொடர்பில் சச்சரவு; 8 வயது சிறுவனும் 19வயது யுவதியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்

காணிக்குள் நீர் செல்வது தொடர்பில் சச்சரவு; 8 வயது சிறுவனும் 19வயது யுவதியும்  கொலை செய்யப்பட்டுள்ளனர்
August 27
22:20 2019

வென்னப்புவ, வைய்க்கால் பிரதேசத்தில் 19 வயதுடைய பெண்ணொருவரும் அவரது 08 வயதுச் சகோதர்ரும் இன்று (27) காலை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

வீடொன்றின் காணியிலிருந்து வெளியேறும் நீர், அயல் வீட்டுக் காணிக்குள் செல்வது தொடர்பாக நீண்டகாலமாக இரு வீட்டாருக்கும் இடையில் தகராறு நிலவி வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று (27) காலை குறித்த அயல்வீட்டாரின் காணிக்குள் நுழைந்து, அங்கிருந்த 19 வயதான குறித்த யுவதியையும் அவரது 8 வயதான சகோதரரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயதுடைய சந்தேகநபரான குட்டிகே இஷான் என்பவர், வென்னப்புவ பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com