ilakkiyainfo

காதலில் கட்டுண்ட இரு யுவதிகளும் பிரிவை விரும்பாத நிலையில் ஒருவரை மற்றவர் கடத்திச் செல்ல முயற்சித்த போது பிடிபட்டார்!

காதலில் கட்டுண்ட இரு யுவதிகளும் பிரிவை விரும்பாத நிலையில் ஒருவரை மற்றவர் கடத்திச் செல்ல முயற்சித்த போது பிடிபட்டார்!
August 18
15:08 2016

ஹெட்டிபொல பிர­தே­சத்தில் 20 மற்றும் 15 வய­தான இரு யுவ­தி­க­ளி­டையே ஏற்­பட்ட அப­ரி­மி­த­மான காதலின் விளை­வாக இரு­பது வயதான யுவதி மற்­றைய யுவ­தியை முச்­சக்­கர வண்டி ஒன்றில் கடத்திச் செல்ல முயற்­சித்த போது யுவதி உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் மூவர் பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்­பட்டு பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­விரு யுவ­திகள் இரு­வரும் உற­வி­னர்கள் எனவும் இரு­வ­ரி­டையே மிக நீண்ட நாட்­க­ளாக நிலவி வந்த காத­லை­ய­டுத்து, வென்­னப்­புவ பிர­தே­சத்தை சேர்ந்த 20 வய­தான யுவதி தனது நண்பி ஒரு­வ­ருடன் இணைந்து முச்­சக்­கர வண்டி ஒன்­றினை வாட­கைக்கு அமர்த்தி, பலவந்­த­மாக மேற்­படி 15 வய­தான யுவ­தியைக் கடத்தி செல்ல முற்­பட்ட போதே இவ்­வாறு பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மேற்­கு­றிப்­பிட்ட 20 வய­தான யுவதி ஆண்கள் போன்று தலை­மு­டியை அலங்­கா­ரப்­ப­டுத்திக் கொண்டு, ஆண்கள் அணியும் உடை­களை அணிந்து எப்­போது ஆண் ஒரு­வரை போன்றே தோற்­ற­ம­ளித்­துள்­ள­துடன் சிகரெட் மற்றும் மது­பா­னங்­க­ளையும் உப­யோ­கித்து வந்துள்ளார்.

ஹெட்­டி­பொ­லவில் வசிக்கும் தனது உற­வி­ன­ரான 15 வய­தான சிறு­மியின் வீட்­டுக்கு சென்ற இந்த யுவதி சிறிது காலம் அங்கு தங்­கி­யி­ருந்த போது இரு­வ­ருக்­கு­மி­டையே ஒரு வகை­யான ஈர்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

எனினும் வென்­னப்­பு­வயை சேர்ந்த (20 ) யுவ­தியின் நடத்­தையை விரும்­பாத சிறு­மியின் வீட்டார் அவரை அங்­கி­ருந்து அனுப்­பி­ய­தோடு, மறு­ப­டியும் .இங்கே வர­வேண்டாம் என எச்­ச­ரித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து, அங்­கி­ருந்து புறப்­பட்டு வீடு சென்ற யுவதி, 18 வய­தான நண்பி ஒரு­வரை அழைத்துக் கொண்டு தனக்கு தெரிந்த முச்சக்க­ர­வண்டி ஒன்றில் ஹெட்­டி­பொ­ல­வுக்கு சென்று தனது காத­லி­யான 15 வயது சிறு­மியை பல­வந்­த­மாக அழைத்­து­வர முயற்சித்துள்ளார்.

அதன்­போதே குறித்த யுவ­தியும் அவ­ருக்கு ஆத­ர­வ­ளித்த நண்­பியும் முச்­சக்­க­ர­வண்டி சார­தியும் பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்பட் பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர்.

இந்த இரு யுவ­தி­களின் வீடு­களில் இருந்தும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் பரிமாற்றிக் கொண்ட பல காதல் கடிதங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை ஹெட்டிபொல நீதிவான் மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com