ilakkiyainfo

காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி

காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
November 27
13:17 2018

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்ற மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் இணைந்து ரொமான்டிக் காமெடி பலந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தாவின் செயல்பாடுகள் அதிக விமர்சனங்களைச் சந்தித்தன.

அதன் மூலம் அவர் அதிக கவனம் பெற்றார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

பிக்பாசில் அவரோடு இணைந்து கலந்துகொண்ட மகத் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம்.சி இயக்குகிறார்.

இவர் ஹாலிவுட் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

ரொமாண்டிக் காமெடி கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

201811271500499238_1_Mahat-AIshwarya-Dutta2._L_styvpfமகத் தற்போது சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரீன் தெரசா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா, ஹரிஷ் கல்யாண் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தனர்.

ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே பாணியில் மகத், ஐஸ்வர்யா களம் இறங்கி உள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com