காத்தான்குடியில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழங்கள்

மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நடப்பட்ட 70 பேரீச்ச மரங்களில் பேரீச்சம் பழங்கள் தற்போது காய்த்துள்ளன.
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்சம் மரங்களிலுள்ள பேரீச்சம் பழங்கள் பூத்தும் காய்த்தும் பழமாகியும் காணப்படுகின்றன.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் பேரீச்சம் பழங்கள் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பேரீச்சம்பழ நடுகை கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்தது. (பாறுக் ஷிஹான்)
There are no comments at the moment, do you want to add one?
Write a comment