ilakkiyainfo

காற்று துகள்கள் மூலம் திடீரென கருத்தரித்து குழந்தையை ஈன்ற யுவதி

காற்று துகள்கள் மூலம் திடீரென கருத்தரித்து குழந்தையை ஈன்ற யுவதி
February 18
16:42 2021

உலகில் கொரோனா தொற்று ஒரு புறம் முடிவின்றி தொடர்ந்து வரும் நிலையில் மறுபுறம் ஆச்சரியமளிக்கும் செய்திகளும் குறைவின்றி வந்த வண்ணமே உள்ளன.

அந்த வகையில் இந்தோனேசியாவில் 25 வயது யுவதி ஒருவர் திடீரென்று கர்ப்பவித்து குழந்தை பிரசவித்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை உண்டாகியுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பிராந்தியத்தில் உள்ள ச்சான்ஜூல்  நகரில் அதிசயமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அதாவது காற்று துகள்கள் மூலம் திடீரென கருத்தரித்து குழந்தையை ஈன்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் siti zaina என்ற பெண் கூறுகையில் ” தான் வசித்த அறையில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் திடீரென காற்று  தனது  உடலுக்குள் புகுந்ததாகவும் அதனை தொடர்ந்து வயிற்றில் வலி ஏற்பட்டதுடன் வயிறு பெரிதானதாகவும் பின்னர் அப்பிரதேச சுகாதார வைத்தியசாலைக்குச் சென்றதையடுத்து, தான் பெண்  குழந்தை ஒன்றினைப்  பிரசவித்ததாகவும் ” தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி காற்றைவிட வேகமாக பரவி தற்பொழுது வைரலாகியுள்ளது.

தான் எந்தவிதமான தாம்பத்திய உறவும் கொள்ளவில்லை என்றும் காற்று துகள்கள் மூலமே தான் கருவுற்றதாகவும் தெரிவித்திருக்கும் zaina, குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் பிறக்கும் போது குழந்தை 2.9kg நிறை உடையதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், உலகில் அரிய நிகழ்வாக இவ்வாறு தாய்யொருவர் மகப்பேற்றுக்கு செல்லும் வரை தான் கர்ப்பமுற்றவர் என்பதை அறிந்திருக்க முடியாது இருக்கும் எனவும், இது ஒரு வியப்பூட்டும் கருத்தரிப்பு எனவும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான வதந்திகளை  தடுப்பதற்கு இவ்விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  கன்னிப்பிறப்புக்கள்  எனப்படும்   virgin births in nature are common என்றும், குறிப்பாக பல்லிகள் மற்றும் சுறா மீன்கள் ஆண் துணை  இல்லாமலே குட்டிகளை பிரசவிக்க கூடியவை  எனவும் வைத்திய நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது கருத்தரிப்பு இல்லாத இனப்பெருக்கமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்த்துள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com