இலங்கையில், புத்தளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரின் வீட்டில் வித்தியாசமான தேங்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த ஜேமிஸ் என்பவரின் வீட்டிலேயே இந்த தேங்காய் கிடைத்துள்ளது. காலை உணவிற்காக தேங்காய் உடைக்கும் போது அந்த தேங்காய்க்குள் இரண்டு தேங்காய்கள் காணப்பட்டுள்ளன.

வழமைக்கு மாறாக இவ்வாறு தேங்காய் காணப்படுவது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும்.