பொலிவியா நாட்டில் விறுவிறுப்பாக ஒரு கால்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள் மத்தியில் இனம் தெரியாத நிழல் உருவம் ஒன்று ஓடியது கேமராவினால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பொலிவியா மக்கள் இது கண்டிப்பாக பேய்தான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு பொலிவியா நாட்டில் உள்ள La Paz, Bolivia என்ற நகரில் Hernando Siles Stadium என்ற மைதானத்தில் கால்பந்து போட்டி ஒன்று மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த போட்டியை நேரடி ஒளிபரப்புக்காக கேமராவினால் படம் பிடித்துக்கொண்டிருந்தபோது, இனம்தெரியாத நிழல் உருவம் ஒன்று பார்வையாளர்களின் மத்தியில் மிக வேகமாக ஓடியது பதிவாகியுள்ளது. இந்த காட்சியை பார்த்த கேமராமேன் அதிர்ச்சி அடைந்தார்.
பார்வையாளர்கள் மற்றும் தடுப்புகளை எல்லாம் தாண்டி அந்த உருவம் மிக வேகமாக ஓடிய காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த காட்சியை இண்டர்நெட் மற்றும் தொலைக்காட்சியை பார்த்த பலர், இந்த உருவம் முன்னாள் வெனிசுலா அதிபர் Hugo Chaves அவர்களின் உருவத்தை ஒட்டி இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.
முன்னாள் அதிபர் Hugo Chaves, கடந்த 2013ஆம் வருடம் மார்ச் 5ஆம் தேதி மரணம் அடைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் ஒரு கால்பந்தாட்ட பிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கால்பந்தாட்ட போட்டிகள் நடக்கும்போது இதுமாதிரியான நிழல் உருவம் குறுக்கே ஓடுவது இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே தென் அமெரிக்க மைதானங்களில் இதுபோன்ற நிழலுருவம் ஓடிய காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது