Site icon ilakkiyainfo

காஸாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஐ.நா. அழைப்பு

பலஸ்­தீன காஸா பிராந்­தி­யத்தில் உட­ன­டி­யான நிபந்­த­னை­யற்ற மனி­தா­பி­மான யுத்த நிறுத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்த ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபை அழைப்பு விடுத்­துள்­ளது.

முஸ்­லிம்­களின் புனித பண்­டிகைத் திரு­நா­ளான ரம­ழா­னுக்கும் அதற்கு அப்­பா­லு­மான காலப்­ப­கு­தியில் யுத்த நிறுத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் அழைப்பு விடுப்­ப­தற்கு ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபையில் இடம்­பெற்ற கூட்­டத்­தொ­டரின் போது ஆத­ர­வ­ளிக்­கப்­பட்­டது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரா­ளி­களால் யுத்த நிறுத்­த­மொன்று அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து பல நாட்­க­ளுக்குப் பின்னர் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு காஸா பிராந்­தி­யத்தில் அமைதி நில­வி­ய­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

இஸ்ரேல் மற்றும் காஸா பிராந்­தியப் போரா­ளி­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்­களால் இது­வரை 1030 க்கும் அதி­க­மான பலஸ்­தீ­னர்­களும் 43 இஸ்­ரே­லிய படை­வீர்கள், இரு இஸ்­ரே­லிய பொது­மக்கள் மற்றும் இஸ்­ரே­லி­லுள்ள ஒரு தாய்­லாந்து பிரஜை ஆகியோர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் தென் இஸ்­ரே­லிய பிராந்­தி­யத்தில் திங்­கட்­கி­ழமை புதி­தாக ஏவு­கணைத் தாக்­கு­த­லொன்று இடம்­பெற்­ற­தாக இஸ்­ரே­லிய இரா­ணுவம் தெரி­விக்­கின்­றது.

மூன்று வாரங்­க­ளுக்கு பின்னர் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு காஸா பிராந்­தி­யத்தில் அமைதி நில­விய போதும் இது­வரை மோதல்­களால் பெருந்­தொ­கை­யானோர் உயி­ரி­ழந்­துள்­ளதால் அந்த பிராந்­தி­யத்­தி­லான ரமழான் பண்­டி­கைக்­கால கொண்­டாட்­டங்கள் சோபை இழந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

காஸா தொடர்பில் ஐக்­கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் ருவண்­டா­வி­லிருந்து வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில்,காஸாவின் எதிர்­காலம் தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு வழி­வ­குக்கும் உடன்­ப­டிக்­கை­யொன்றை எட்­டவும் ஐக்­கிய நாடுகள் சபை­யினது நிலை­யங்கள் உட்­பட சிவி­லிய மற்றும் மனி­தா­பி­மான நிலை­யங்கள் மதிப்­ப­ளிக்­கப்­ப­டவும் பாது­காக்­கப்­ப­டவும் வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் காஸா­வி­லுள்ள பலஸ்­தீன மக்­க­ளுக்­கான உட­னடி மனி­தா­பி­மான உத­வி­களின் தேவைப்­பாடு குறித்தும் அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­ப­ட்டுள்­ளது.

இந்த அறிக்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபைக்­கான பலஸ்­தீன பிர­தி­நி­தி­யான றியாத் மன்சூர் கூறு­கையில், காஸா­வி­லி­ருந்து தனது படை­யி­னரை இஸ்ரேல் வாபஸ் பெற்றாலே உடன்­ப­டிக்கை சாத்­தியம் என தெரி­வித்­துள்­ளார்.

இந்நிலையில்இஸ்ரேலிய பிரதமர்பெஞ்ஜமின் நெட்டான்யாஹுவுடன்தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உடனடியான நிபந்தனையற்ற மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுத்தார்.

Exit mobile version