Site icon ilakkiyainfo

கிராண்ட்பாஸ் துப்பாக்கிப் பிரயோகம்; முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன – பொலிஸார் (வீடியோ)

கொழும்பு – கிராண்ட்பாஸ் – அன்ரு தோட்டப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முக்கிய சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் (29) எட்டு மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களும் தற்போது அவர்களின் இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இவர்களின் மரணம் துப்பாக்கிப் பிரயோகத்தால் நேர்ந்ததாக, நேற்று பிற்பகல் இடம்பெற்ற மரண விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அன்ரு தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான உஸ்வத்தகே ஜனித் சாமர மற்றும் 26 வயதான திருமணமான சுபசிங்க ஆராய்ச்சிகே காவிந்த ஆகிய இருவருமே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தனர்.

மலசலகூடத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச்சூடு : விசேட குழு விசாரிக்கவுள்ளது.
01-07-2014குருணாகல் பொலிஸ் நிலையத்தின் மலசலகூடத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவரின் தலையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற  சம்பவம் தொடர்பில் குருணாகல் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இன்று (01) காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குருணாகல் – கொகரெல்ல – அரன்கலே பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுசில் ஜயசுந்தர என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் நெற்றிப் பகுதியிலேயே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குருணாகல் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டுப் பிரிவில், நேற்று இரவு முதல் இவர் கடமையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது கடமை இன்று காலை 5.55 க்கு நிறைவடையவிருந்தது.

குறித்த பிரிவிற்கு நேற்று இரவு 9.45 க்கு இறுதி முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அதற்கு பின்னர் அவர் ஓய்வாகவே இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் நகரின் பாதுகாப்புக் கடமைகளுக்காக இன்று காலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன் மேலும் நால்வர் அனுப்பப்பட்டிருந்தனர்.

ஏனைய மூன்று பேரையும் கடமைக்கு செல்லுமாறு கூறிவிட்டு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆண்களுக்கான மலசலகூடத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது,  அவரது நெற்றிக்கு மேற்பகுதியில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர் சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 25 வருடங்களாக பொலிஸ் சேவையில் கடமையாற்றிவருவதுடன், அவரது சேவை தொடர்பில் எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் இதுவரை இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி  குருணாகல் பொலிஸ் நிலையத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதுடன், அதற்கு முன்னர் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் அவர் சேவையாற்றியுள்ளார்.

Exit mobile version