ilakkiyainfo

கிளிநொச்சிக்கு கல்வி அமைச்சு பதவி வழங்க வேண்டாம்!! : சி.வி.க்கு சிறிதரன் எழுதிய கடிதம் அம்பலம்?! (கடிதம் இணைப்பு)

கிளிநொச்சிக்கு  கல்வி அமைச்சு பதவி வழங்க வேண்டாம்!! : சி.வி.க்கு சிறிதரன் எழுதிய கடிதம் அம்பலம்?! (கடிதம் இணைப்பு)
June 23
17:34 2017

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் விவகாரம் பரபரப்பாகி ஓய்ந்த நிலையிலும் தற்போது கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம் அவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கப்படக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதலமைச்சர் சி.வி.விக்ஸேன்வரனுக்கு எழுதியதாக வெளியாகியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சுக்கள் பதவி விலகிய நிலையில் கல்வி அமைச்சுக்குப் பொருத்தமாக முன்னாள் கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான அரியரட்ணம் காணப்படுகிறார் என்று பரவலாக பேசப்பட்டிருந்தது.

இதேவேளை முன்னாள் கல்வி அமைச்சரின் நெருங்கிய சகாவான பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் அரியரட்ணத்துக்கும் இடையில் விரோத நிலை நீடித்துவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிய கல்வி அமைச்சரை கிளிநொச்சிக்கு வழங்கவேண்டாம் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்ற கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

………………………………………………………………………

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்  முதலமைச்சருக்கு எழுதிய கடிதம்

வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

அக்கடிதத்தில் மேலும்,

‘வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்காக நானும் என்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டேன்.

அது தங்களுக்கும் தெரியும். தொடர்ந்து வடமாகாண சபை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினைத்திறனுடன்  சேவையாற்ற வேண்டும்.

அதற்கு தாங்கள் தொடர்ச்சியாக முதலமைச்சராக பதவி வகிப்பது பொருத்தமானது. நான் தமிழரசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றமையால் தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.

காரணம், கட்சி தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும். ஆதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன். இருப்பினும் உங்களின் தொடர் மக்கள் நலன்சார் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதவாக இருப்பேன்.

மேலும், வடக்கில் ஊழலுக்கு எதிரான தங்களின் நடவடிக்கையை நான் வரவேற்கின்றேன். இருப்பினும் விசாரணை பொறிமுறையில் காணப்படட குறைபாடுகளை நீங்கள் நீக்கியிருந்தால் நிலமை இந்தளவு சிக்கலுக்குள் சென்றிருக்காது என்பது எனது கருத்து.

அத்தோடு, குற்றம் சாட்டப்பட்டு தங்களின் பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களுக்கு மாற்றீடாக புதிய அமைச்சர்களை தெரிவு செய்யும்போது, மாவட்ட ரீதியில் தெரிவு செய்ய வேண்டும் என்றோ, கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்றோ நான் வலியுறுத்த மாட்டேன்.

அவ்வாறே கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால் அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதோடு, இனிவரும் குறுகிய காலத்துக்குள் தங்களுக்கு பொருத்தமான அமைச்சர்களை நியமித்து சிறிப்பாக செயற்பட எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளார்.

அந்தக் கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. (இணைப்பு)

19260268_1848459265403745_5604343769205505868_n

சிறிதரனின் பாராளுமன்ற உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பினையும்,,  பதவி இலட்சினையையும் யாரோ திருடிவிட்டார்களாம்???

“இன்றைய தினம் சில இணையத்தளங்களிலும் சிலரது முகநூல்களிலும் எனது பாராளுமன்ற உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பினையும் பதவி இலட்சினையையும் பயன்படுத்தி, நான் கௌரவ வடமாகாண முதலமைச்சருக்கு எழுதியதாக வெளியிடப்பட்டுப் பரப்பப்பட்டு வரும் கடிதம் உண்மைக்குப் புறம்பானதும் என்னால் எழுதப்படாததும்  ஆகும் என்பதை முதலில் வெளிப்படுத்த விரும்புகின்றேன்.” என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான ‘அறிவகம்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…”என சிறிதரனின்  ஊதுகுழல் இணையதளமான தமிழ்வின் செய்தி வெளியிட்டுள்ளது..

 

கடிதத்தலைப்பினையும்,,  பதவி இலட்சினையையும்  திருடிவிட்டார்கள் என்றால் நம்பலாம். ஆனால், சிறிதரனின் கையெழுத்தையும் யாராவது திருடமுடியுமா???

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com