ilakkiyainfo

கீத் நொயார் கடத்தல் – கோத்தபாயவும் விசாரணை வலையத்துள் கொண்டுவரப்படுவார்

கீத் நொயார் கடத்தல் – கோத்தபாயவும் விசாரணை வலையத்துள் கொண்டுவரப்படுவார்
August 18
17:57 2018

துப்பாக்கியை காட்டி ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் குற்றப்  புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்  வாக்குமூலத்தை பெற்ற பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வாக்குமூலம் பெற அழைக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது.

 கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கீத் நொயார், தெஹிவளை வைத்தியா வீதியில், ஆயுத முனையில் கடத்திச் செல்லப்பட்ட போது, த நேஷன் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லலித் அழககோன், அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொலைபேசியல் தொடர்புக்கொள்ள முயற்சித்த போதும் முடியாமல் போயுள்ளது.

இதன் பின்னர், அன்றைய அரசாங்கத்தில் பொதுநிர்வாக அமைச்சராக இருந்த கரு ஜயசூரியவை ஒருவர் தொடர்புக்கொண்டு கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து கரு ஜயசூரிய உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்புக்கொண்ட போதிலும் அவர் உறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எப்படியாவது ஜனாதிபதியிடம் பேச வேண்டும் என கரு ஜயசூரிய கூறியதை அடுத்து, மகிந்த ராஜபக்ச தொலைபேசி இணைப்புக்கு வந்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவிடம் பேசிய கரு ஜயசூரிய, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதனை திட்டமிட்டு எவரோ செய்துள்ளதாகவும் கீத் நொயாருக்கு ஏதேனும் நடந்தால், தான் அரசாங்கத்தில் இருந்து விலக நேரிடும் எனவும் கூறியுள்ளார்.

இதன் பின்னர் பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, “கரு, குழம்பிக்கொள்ள வேண்டாம், அதனை நான் தேடிப்பார்க்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.

இதன் பின்னர், மகிந்த ராஜபக்ச, அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அன்றைய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜனர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரன, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாடியதன் பயனாக, கீத் நொயார், மல்வானை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com