ilakkiyainfo

கும்பமேளாவில் 2 உலக சாதனைகளை நிகழ்த்திய உத்தரபிரதேச அரசு

கும்பமேளாவில் 2 உலக சாதனைகளை நிகழ்த்திய உத்தரபிரதேச அரசு
March 02
16:53 2019

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடைபெறும்போது, உத்தரபிரதேச மாநில அரசின் சார்பாக நடத்தப்பட்ட பேருந்து அணிவகுப்பு உலக கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (பழைய பெயர் அலகாபாத்) நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழா நடைபெறும். இந்த கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் வருவார்கள். அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கும்பமேளா வரும் 4ம் தேதியுடன் நிறைவடைகிறது. நேற்று கும்பமேளா பதாகைகளை தாங்கி, 500 பேருந்துகள் வரிசையாக சாலையில் அணி வகுப்பு நடத்தின. இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் கும்பமேளா நிர்வாக அமைப்பினர் செய்திருந்தனர்.

201903021332283608_1_gfh._L_styvpfபிரயாக்ராஜ் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து அணிவகுப்பு 3.2 கிலோ மீட்டர் வரை நீண்டது. இது கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. இதற்கான கேடயமும் வழங்கப்பட்டுள்ளது.

201903021332283608_2_ffffd._L_styvpfஇதேபோல் 8 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட நீண்ட சுவர் போன்ற அமைப்பில், மக்களின் கை அச்சுகள் பதிக்கப்பட்ட பதாகைக்காக, கும்பமேளா நிர்வாக அமைப்பு கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com