ilakkiyainfo

கூட்டமைப்பின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடே ‘தமிழ் மக்கள் பேரவை!! – டக்ளஸ் தேவா­னந்தா (செவ்வி)

கூட்டமைப்பின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடே  ‘தமிழ் மக்கள் பேரவை!! – டக்ளஸ் தேவா­னந்தா (செவ்வி)
January 04
22:16 2016

தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் மீது மக்கள் கொண்­டுள்ள அதி­ருப்­தியின் வெளிப்­பாடே தமிழ் மக்கள் பேரவை உரு­வாகக் காரணம்.

தமிழ் மக்கள் பேர­வையின் கொள்­கைகள் குறித்து அதன் ஏற்­பாட்­டா­ளர்­க­ளுடன் உத்­தி­யோ­கப்­பற்­றற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்­திய பின்னர் அதில் இணை­வதா? இல்­லையா? என்­பது குறித்து ஈ.பி.டி.பி. தீர்­மா­னிக்­கு­மென அதன் செய­லாளர் நாய­கமும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா அளித்த  வழங்­கிய செவ்வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கி­றது.

கேள்வி: வடக்கில் புதி­தாக உரு­வா­கி­யுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்­பான ஈ.பி.டி.பி. யின் நிலைப்­பாடு என்ன?

பதில்: தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் மீது மக்கள் கொண்­டுள்ள அதி­ருப்­தியின் கார­ண­மா­கவே இந்த தமிழ் மக்கள் பேரவை உரு­வா­கி­யுள்­ளது.

அத்­துடன் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பில் ஜன­நா­யகம் இல்லை, அங்கு அங்­கத்­துவம் வகிக்­கின்ற கட்­சி­க­ளுக்கு வாய்ப்புக்கள் மறுக்­கப்­பட்டு ஒரு சிலர் மாத்­தி­ரமே தீர்­மானம் எடுக்­கி­றார்கள், மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை இவர்கள் தீர்க்கும் வகையில் செயற்­ப­டு­வது போல் தெரி­வ­தில்லை.

இவ்­வா­றான கார­ணங்­களால் ஏற்­பட்ட அவ­நம்­பிக்­கையால் தான் தமிழ் மக்கள் பேரவை உரு­வா­கி­யுள்­ளது. ஆகவே இச்செ­யற்­பாடும் கூட மோத­கத்­திற்­குப்­ப­தி­லாக கொழுக்­கட்டை போன்ற செய­லாக இருந்­து­வி­டக்­கூ­டாது.

ஏனென்றால் வடி­வத்தில் இரண்டும் வேறா­யினும் உள்­ள­டக்கம் எல்லாம் ஒன்­றுதான். அதே­ேபான்று இப்­பி­ரச்­சி­னையும் அமைந்­து­வி­டக்­கூ­டாது.

மாகா­ண­சபை என்­பது எமக்­குக்­கி­டைத்த பொன்­னான வாய்ப்­புக்­களில் ஒன்று. 1987 ஆம் ஆண்­டி­லேயே இப்­பொன்­னான வாய்ப்பு எமக்­குக்­கி­டைத்­தது. அதனை தமிழ் அர­சியல் தலை­மைகள் சரி­யாக பயன்­ப­டுத்­த­வில்லை.

அவ்­வாய்ப்பு பலத்த அழி­வு­களின் பின்னர் மீண்டும் கிடைத்­துள்­ளது. அத­னைக்­கூட அவர்கள் சரி­யா­ன­மு­றையில் பயன்படுத்­து­வ­தாகத் தெரி­ய­வில்லை.

ஆடத்­தெ­ரி­யா­த­வ­னுக்கு மேடை கோணல் போன்று சாக்கு போக்­கு­களை சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆளுநர், பிரதம செய­லாளர், ஆட்சி என்­ப­வற்றின் மீதே குறை கூறிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இவற்றில் மாற்றம் வந்த பின்­னரும் கூட மாகா­ண­சபை நிதி­யத்தில் 38 சத­வீதம் தான் செல­வ­ழித்­துள்­ளார்கள். அவ்வாறான பிரச்­சி­னை­களும் காணப்­ப­டு­கி­றது.

ஆகவே இதில் இணைந்து கொள்­ளச்­சொல்லி எங்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருக்­கி­றார்கள். அத்­துடன் அழுத்­தமும் இருக்கி­றது.

அதைக்­கு­றித்து நாம் ஆரா­ய­வேண்டும். அவர்கள் பல கட்­சி­களின் கூட்டு என்ற படியால் அவர்­க­ளுக்கு கொள்­கை­களும் இருக்­கின்­றன.

அது எவ்­வா­றான கொள்கை என்றும் அறி­ய­வேண்­டி­யுள்­ளது. அக்­கொள்கை விக்­னேஸ்­வ­ர­னு­டைய கொள்­கையா? அல்லது வடி­வே­லு­டைய கொள்­கையா? பேர­வையின் பொதுக்­கொள்கை எவ்­வா­றா­னது என்றும் நாம் அறியவேண்டியுள்ளது.

அத்துடன் இவர்­களின் நோக்கம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைமை மீதுள்ள அதி­ருப்தி, கசப்பு என்­ப­வற்றால் உரு­வா­னதா என்­பது குறித்தும் நாம் ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது.

அவற்றை பொறுத்­தி­ருந்­துதான் நாம் அறிந்து கொள்­ள­வேண்டும். தமிழ்­பேசும் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்ப்பதற்கான ஒரு கூட்­டு­மு­யற்­சிக்கு நாங்கள் ஒரு­போதும் தடை­யாக இருக்­க­மாட்டோம்.

கேள்வி: தமிழ் மக்கள் பேரவை என்­பது மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களின் கூட்டு என்ற குற்­றச்­சாட்டு நிலவுகின்­றதே அது  கு­றித்த உங்­க­ளது கருத்து யாது?

பதில்: அக்­குற்­றச்­சாட்­டு­களில் உண்மை இல்­லா­விட்­டாலும் நாம் ஆரா­ய­வேண்­டிய அவ­சி­ய­முண்டு. தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு தலை­மைகள் மீது கொண்­டுள்ள அவ­நம்­பிக்கை அத்துடன் ஒரு இணக்க அர­சி­ய­லுக்­கூ­டாக பதவிகளைத்தான் பெற்­றி­ருக்­கி­றார்­களே தவிர பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வைக்­காண முன்­வ­ரு­வ­தில்லை.

எதிர்க்­கட்­சித்­த­லைவர் பதவி, குழுக்­களின் பிர­தித்­த­லைவர் போன்ற பத­வி­களை பெற்­றுள்­ளார்­களே தவிர பிரச்சினைகளை தீர்ப்­ப­தா­கத்­தெ­ரி­ய­வில்லை.

நான் அடிக்­கடி கூறு­கின்ற விடயம் என்­ன­வென்றால் எந்­த­வொரு அர­சாங்­கமும் புதி­தாக ஆட்­சிக்கு வந்து ஆறு மாதங்கள் அல்­லது ஒரு வருட காலத்­திற்குள் முக்­கிய பிரச்­சி­னை­களை தீர்க்­கா­விடின் அவை ஆறிய கஞ்சி பழங்­கஞ்சி என்ற நிலைக்கு வந்­து­விடும்.

இந்த நூறுநாள் வேலைத்­திட்­டத்­தி­லேயே இந்­தக்­காணிப் பிரச்­சி­னையைத் தீர்த்­தி­ருக்­கலாம். அர­சியல் கைதி­களை விடுவித்­தி­ருக்­கலாம். மாகாண சபைக்­கு­ரிய அதி­கா­ரங்­களை கணி­ச­மான அளவு பெற்­றி­ருக்­கலாம். ஆனால் எதையும் அவர்கள் செய்­ய­வில்லை.

கேள்வி: இது­வ­ரையும் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு புதிய அர­சுடன் இணைந்து ஏறத்­தாழ 2000 ஏக்கர் அளவில் காணியை சம்­பூ­ரிலும் ஏனைய இடங்­க­ளிலும் விடு­வித்­துள்­ளார்கள் தானே ?

பதில்: இது அர­சாங்கம் தனது கொள்­கை­க­ளிலும் வேலைத்­திட்­டங்­க­ளிலும் கூறி­யதை நிறை­வேற்­றி­யுள்­ளதே இவற்­றை­யெல்லாம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் சாத­னை­க­ளாக கருத முடி­யாது.

கேள்வி: தமிழ் மக்கள் பேரவை எதிர்­கா­லத்தில் ஒரு அர­சியல் அமைப்­பாக மாறும் என நீங்கள் கரு­து­கி­றீர்­களா?

பதில்: இவர்கள் இதை வெளிப்­ப­டை­யாக மறுத்­தாலும் இவர்­களின் நோக்கம், இலக்கு என்­பவை இது­வா­கத்தான் இருக்கும்.

இதனை வர­லாற்­றி­னூ­டாக நாங்கள் கண்­டுள்ளோம். உதா­ர­ண­மாக கம்­ப­வா­ரி­தியின் பாச­றையில் இருந்­துள்ள விக்னேஸ்­வ­ரன்தான் அர­சியல் பிர­மு­க­ராக வெளி­வந்­துள்ளார்.

ஆகவே அவர் கம்­ப­வா­ரி­தியின் பாச­றையில் இருந்து வரா­விட்டால் அர­சி­ய­லுக்குள் பிர­வே­சிக்க வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆகவே பொது அமைப்­புக்­க­ளுக்­கூ­டாக அர­சியல் பிர­வே­சங்கள் இடம்­பெற்­றதும் உண்டு.

சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், எஸ். ­க­ஜேந்­திரன், ரி.சித்­தார்த்தன், தமி­ழ­ர­சுக்­கட்­சியின் முக்கியஸ்தர் பேரா­சி­ரியர் சிற்­றம்­பலம், இவர்களெல்லோரும் அர­சியல் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள்.

அத்­துடன் செல்வம் அடைக்­க­ல­நாதன் கூட அவ்­வா­றான ஒரு­வரே. ஏனென்றால் அவர் பேசி­யதை மறு­தி­னமே மறுத்துவிட்டார்.

ஆகவே அவர்­கூட இதில் சேர்­வ­தற்­கான வாய்ப்­புண்டு. ஏனென்றால் கடந்த 30 ஆம் திகதி இரா. சம்­பந்தன், மாவை சேனாதி­ராசா, எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தி­நி­தி­களை சந்­தித்­தி­ருக்­கி­றார்கள்.

அவர்கள் மூன்று பேரும் தமி­ழ்­ரசுக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள். ஆகவே இது தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சந்­திப்பா அல்­லது தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் சந்­திப்பா என்­றொரு கேள்வி எழுந்­துள்­ளது.

செல்­வத்­திற்கும் சித்­தார்த்­த­னுக்கும் அழைப்பு விடுத்தும் அவர்கள் அதனை நிரா­க­ரித்து விட்­டார்கள். ஆகவே இதனை அர­சி­ய­லுக்­கான ஒரு முயற்­சியா அல்­லது மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான முயற்­சியா என்­பதை நாம் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

நேர்காணல் எஸ். கணேசன் படப்பிடிப்பு எம். எஸ். சலீம்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

November 2020
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com