கென்யாவில் அபூர்வ வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் தென்பட்டுள்ளன.
இங்குள்ள, Ishaqbini வனப்பகுதியில் இரு வெள்ளை நிற ஒட்டகக்சிவிங்கிகளை மக்கள் பார்த்துள்ளனர். அதை வீடியோவும் எடுத்து யூடியூப்பில் பதிவேற்றியுள்ளனர். தாயும் குட்டியுமாக இவை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன், தான்சேனியாவில் உள்ள தராங்கிர் வனத்தில் வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி ஒன்று வசித்தது. மக்கள் அதற்கு ‘ஓமோ’ எனச் செல்லப் பெயரிட்டு அழைத்தனர். 2016-ம் ஆண்டு ஓமோவை கடைசியாக மக்கள் பார்த்துள்ளனர். அதற்குப் பிறகு ஓமோ தென்படவில்லை.