கொழும்பில் இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு இதுவரை 24 பேருடைய சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு, கொச்சிக்கடை, நீர்கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பிலும், மற்றும் கிங்ஸ்பெரி, சினமண்ட்கிரேண்ட், சங்கரில்லா போன்ற நட்டசத்திர ஹோட்டல்களிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் பலர் காயமடைந்த நிலையில் கொழும்பு, தேசிய வைத்தியசாலையிலும், கொழும்பு களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தவற மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் அருகாமையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பிலும் 25 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1555822825032