ilakkiyainfo

கொட்டிலுக்குள் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு : கொலையா? தற்கொலையா? – மட்டக்களப்பில் சம்பவம்!

கொட்டிலுக்குள் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு : கொலையா? தற்கொலையா? – மட்டக்களப்பில் சம்பவம்!
February 21
17:12 2018

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கணேச வித்தியாலய வீதியை அண்டிய பகுதியின் கொட்டில் ஒன்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டு உடற் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

kolaiias

இன்று காலை மீட்கப்பட்ட இச்சடலம் அப்பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சண்முகரெத்தினம் பிரதீபாவினுடையது என பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளனர்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த யுவதி அப்பகுதியிலுள்ள கடையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார்.

வழமை போன்று கடைக்குச் செல்பவர் இன்று  கடைக்குத் தயாராகவில்லை என பெற்றோர் தேடியபோது வீட்டோடு சேர்ந்ததாக அமைக்கப்பட்டிருந்த கொட்டிலுக்குள் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.Close media panel

28058614_1771734279549489_1066427046970602252_nதகவல் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் விரிவான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இந்த யுவதியை திருமணம் செய்வதாக உறுதியளித்திருந்த நபர் தான் வெளிநாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற உத்தேசத்தை யுவதியிடம் தெரிவித்துள்ளார்.

28166441_1771734296216154_5303898652229276129_nஅதன்படி சுமார் 2 இலட்சம் ரூபாய் பணத்தை யுவதி வட்டிக்கு கடனாகப் பெற்று செலுத்தி வந்ததாகவும் கடைசியில் அந்த ஆண் நண்பர் வெளிநாடு செல்வதைக் கைவிட்டு விட்டதாகவும் இதனால் யுவதி தான் பெற்றுக் கொடுத்த கடன் தொகையை செலுத்த முடியாமலும், நம்பிக்கைத் துரோகத்தால் விரக்தியடைந்திருந்ததாகவும் உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பொலிஸார் குறித்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com