வட கொரியாவிற்கு எதிராக நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா?
வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைத் தடுக்க அமெரிக்காவில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
நுண்ணலைகள் படும் பொருட்களின் மூலக்கூறுகள் விரைவாக ஒன்றன் மீது ஒன்று உரசப்படும். அப்போது அதில் வெப்பம் பிறக்கும். எமது வீடுகளில் இதனால் உணவுகளைச் சூடாக்குகின்றோம்.
இது பாரிய அளவில் செயற்படுத்தும் போது எதிரி இலக்குகளை பொரித்துக் கருக்கிவிடும்.
வட கொரியா ஏவுகணைகளை வீசுத் தயாராகும் போது அந்த இடங்கள் செய்மதி மூலம் அவதானிக்கப்படும். அத்தகவல்களை விமானப் படைத்தளங்களுக்கு அனுப்படும்.
விமானத் தளங்களில் இருந்து B-52 போர் விமானங்கள் அந்த இடத்துக்கு மேலாகச் சென்று Boeing AGM-86B என்னும் சீர்வேக (Cruise) நுண்ணலை ஏவுகணைகளை வீசும்.
அது உருவாக்கும் நுண்ணலைகள் இலக்கில் உள்ள கணினிகளையும் செயலிழக்கச் செய்யும். ஆனால் அங்குள்ள மக்களுக்கோ அல்லது கட்டிடத்திற்கோ எந்த சேதமும் ஏற்படாது. இதனால் இது அழிவில்லாத படைக்கலன் என அழைக்கப்படுகின்றது.
வட கொரியா இன்னும் அசையும் பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை ஏவத் தொடங்கவில்லை. பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை வட கொரியா ஏவ விரைவில் தொடங்கலாம்.
உருமாற்றம் செய்யப்பட்ட பார ஊர்திகளில் இருந்து வட கொரியா ஏவுகணைகளை ஏவுவதை அமெரிக்க செய்மதிகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும்.
அத்துடன் துரிதமாகச் செயற்பட்டு பார ஊர்திகளில் இருந்து ஏவும் போது அமெரிகாவின் B-52 அங்கு செல்வதற்கான கால அவகாசம் கிடைக்காமல் போகலாம்.
வட கொரியாவில் பூகோள அமைப்பு பல சிறியதும் பெரியதுமான மலைத் தொடர்கள் நிறைந்தது. குறுகிய பள்ளத்தாக்குகள் நிறைய உண்டு.
(It comes after Kim tested the Hwasong-15 ICBM which is likely capable of ranging the whole US and can carry a ‘super heavy nuclear warhead’, according to the hermit state)
அவற்றுக்குள் தனது ஏவுகணை வீசு நிலையங்களை மறைத்து வைத்திருக்கலாம். அமெரிக்கா நுண்ணலை ஏவுகணைகளைப் வட கொரியாவிற்கு எதிராகப் பாவிக்கத் தொடங்கிய பின்னரும் ஏவுகணைப் பரிசோதனை தொடர்ந்தால் அது அமெரிக்கவிற்கு பெரும் அவமானகரமானதாக அமையும்.
தனது ஏவுகணைப் பரிசோதனைக்கு எதிரான நுண்ணலைத் தாக்குதலை வட கொரியா ஒரு போர் நடவடிக்கையாகப் பிரகடனப் படுத்தலாம். பதிலடியாக தென் கொரியத் தலைநகரைத் துவம்சம் செய்யும் எறிகணை வீச்சுக்களைச் செய்யலாம்.
வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைத் தடுக்க அமெரிக்காவில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
நுண்ணலைகள் படும் பொருட்களின் மூலக்கூறுகள் விரைவாக ஒன்றன் மீது ஒன்று உரசப்படும். அப்போது அதில் வெப்பம் பிறக்கும்.
எமது வீடுகளில் இதனால் உணவுகளைச் சூடாக்குகின்றோம். இது பாரிய அளவில் செயற்படுத்தும் போது எதிரி இலக்குகளை பொரித்துக் கருக்கிவிடும்.
வட கொரியா ஏவுகணைகளை வீசுத் தயாராகும் போது அந்த இடங்கள் செய்மதி மூலம் அவதானிக்கப்படும். அத்தகவல்களை விமானப் படைத்தளங்களுக்கு அனுப்படும்.
விமானத் தளங்களில் இருந்து B-52 போர் விமானங்கள் அந்த இடத்துக்கு மேலாகச் சென்று Boeing AGM-86B என்னும் சீர்வேக (Cruise) நுண்ணலை ஏவுகணைகளை வீசும்.
அது உருவாக்கும் நுண்ணலைகள் இலக்கில் உள்ள கணினிகளையும் செயலிழக்கச் செய்யும். ஆனால் அங்குள்ள மக்களுக்கோ அல்லது கட்டிடத்திற்கோ எந்த சேதமும் ஏற்படாது. இதனால் இது அழிவில்லாத படைக்கலன் என அழைக்கப்படுகின்றது.
வட கொரியா இன்னும் அசையும் பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை ஏவத் தொடங்கவில்லை. பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை வட கொரியா ஏவ விரைவில் தொடங்கலாம்.
உருமாற்றம் செய்யப்பட்ட பார ஊர்திகளில் இருந்து வட கொரியா ஏவுகணைகளை ஏவுவதை அமெரிக்க செய்மதிகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும்.
அத்துடன் துரிதமாகச் செயற்பட்டு பார ஊர்திகளில் இருந்து ஏவும் போது அமெரிகாவின் B-52 அங்கு செல்வதற்கான கால அவகாசம் கிடைக்காமல் போகலாம்.
வட கொரியாவில் பூகோள அமைப்பு பல சிறியதும் பெரியதுமான மலைத் தொடர்கள் நிறைந்தது. குறுகிய பள்ளத்தாக்குகள் நிறைய உண்டு.
அவற்றுக்குள் தனது ஏவுகணை வீசு நிலையங்களை மறைத்து வைத்திருக்கலாம். அமெரிக்கா நுண்ணலை ஏவுகணைகளைப் வட கொரியாவிற்கு எதிராகப் பாவிக்கத் தொடங்கிய பின்னரும் ஏவுகணைப் பரிசோதனை தொடர்ந்தால் அது அமெரிக்கவிற்கு பெரும் அவமானகரமானதாக அமையும்.
தனது ஏவுகணைப் பரிசோதனைக்கு எதிரான நுண்ணலைத் தாக்குதலை வட கொரியா ஒரு போர் நடவடிக்கையாகப் பிரகடனப் படுத்தலாம். பதிலடியாக தென் கொரியத் தலைநகரைத் துவம்சம் செய்யும் எறிகணை வீச்சுக்களைச் செய்யலாம்.
-கலையரசன்-
There are no comments at the moment, do you want to add one?
Write a comment