ilakkiyainfo

கொரோனாவினால் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திருவிழாவிற்கு நேர்ந்த கதி…!! வெறும் 30 பேருக்கு மட்டுமே அனுமதி…!! சப்பறம், தேர்த் திருவிழாக்களும் ரத்து..!!

கொரோனாவினால் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திருவிழாவிற்கு நேர்ந்த கதி…!! வெறும் 30 பேருக்கு மட்டுமே அனுமதி…!! சப்பறம், தேர்த் திருவிழாக்களும் ரத்து..!!
June 10
06:58 2020

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று நடைபெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா இம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாள்கள் இடம்பெறவுள்ளது.

நயினாதீவு பகுதியிலுள்ள 30 அடியவர்கள் மட்டும் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம்.

அதேவேளை மகோற்சவ காலத்தில் அன்னதானம் வழங்குவதற்கும் சுகாதாரப் பிரிவினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.வெளிமாவட்டங்களில் இருந்து எவரும் ஆலயத் திருவிழாவில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருப்பவர்களும் கலந்து கொள்ள முடியாது.எனவே, இதனைக் கருத்தில் கொண்டு இம்முறை நயினாதீவு ஆலய உற்சவத்திற்கு வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் குறித்த ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதேவேளை தேர், சப்பற, திருவிழாக்கள் எதுவும் இடம்பெறமாட்டாது. ஆலய உற்சவங்கள் அனைத்தும் உள்வீதி உடனேயே நிறைவுபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com