உலகளவில் கொரோனாவினால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புக்கள் 4 இலட்சத்தை தாண்டியுள்ளதாக வேல்டோமீற்றர் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உலகளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,973,427 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 402,049 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பினோரின் எண்ணிக்கை 3,411,118 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலையில் இருந்து வருகிறது.

அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,988,544 ஆகவும், மரணமடைந்தோர்  112,096 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 751,695 ஆகவும் , நேற்று மாத்திரம் 706 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

 

பிரேசிலில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 673,597 ஆகவும், மரணமடைந்தோர்  35,957 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 302,084 ஆகவும் , நேற்று மாத்திரம் 910 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஸ்யாவில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 458,689 ஆகவும், மரணமடைந்தோர்  5,725 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 221,388 ஆகவும் , நேற்று மாத்திரம் 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  288,390 ஆகவும், மரணமடைந்தோர்  27,135 ஆகவும், நேற்று  ஒருவர்  மாத்திரம் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  236,657 ஆகவும், மரணமடைந்தோர்  6,642 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 114,073 ஆகவும் , நேற்று மாத்திரம் 297 பேர் உயிரிழந்துள்ளனர். சில நாடுகளில் கொரோனா நோய் தாக்கம் படிப்படியாக குறைவடைந்திருந்தாலும், பல நாடுகளில் நோய் தீவிரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஆரம்ப நிலையை ஒப்பிட்டு பார்க்கையில், அமெரிக்காவில் தற்போது கொரோனா தீவிர நிலை சற்று குறைந்துள்ளது.