ilakkiyainfo

கொரோனா விஷயத்தில் எங்கே சொதப்பியது அமெரிக்கா?! இந்தியாவுக்கான மெசேஜ்!

கொரோனா விஷயத்தில் எங்கே சொதப்பியது அமெரிக்கா?! இந்தியாவுக்கான மெசேஜ்!
March 30
18:29 2020

ஓர் உலகளாவிய பிரச்னையை அமெரிக்காவும், அதன் அதிபரான ட்ரம்ப்பும் இன்னும் கொஞ்சம் சீரியஸாக அணுகியிருக்கலாம் என்கிறார்கள் அனைவரும்.

“மனிதகுலம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்துவருகிறது. நமது தலைமுறையின் ஆகப்பெரும் ஆபத்து கொரோனாதான். மக்களும் அரசாங்கம் எடுக்கவிருக்கும் முடிவுகளுமே இந்த உலகத்துக்கான அடுத்த நம் நாள்களை முடிவுசெய்யப்போகிறது. இங்கு முற்றிலுமாய் சிதைந்து மாறப்போவது மருத்துவம் மட்டுமல்ல, பொருளாதாரமும்தான்.

huhu8பொருளாதாரத்துடன், அரசியல், பழக்கவழக்கம் என எல்லாவற்றிலும் மாற்றம் வரப்போகிறது. நாம் சமயோசிதமாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. நமது முடிவுகளில் விளைவுகளையும் சிந்திக்க வேண்டிய சூழல் இது. தற்போதைய பிரச்னையைத் தீர்ப்பதோடு நில்லாமல், இந்தப் பேரலை கடந்தபின் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதையும் நாம் சிந்தித்துப்பார்ப்பது அவசியம்.”

சேப்பியன்ஸ், ஹோமோடியஸ், 21 lessons for 21st Century போன்ற புத்தகங்களின் மூலம் உலகம் முழுக்க பிரபலமான யுவல் நோவா ஹராரியின் ஃபினான்ஷியல் டைம்ஸ் கட்டுரையின் ஆரம்ப வரிகள் இவை.

மார்ச் 20-ம் தேதி இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. மார்ச் 20-ம் தேதி, கொரோனாவால் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,75,550. நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் இக்கட்டுரைக்கான தரவுகள் எழுதும்போது அது 7,65,031. நீங்கள் படிக்கும்போது இன்னும் இது அதிகமாகவே ஆகியிருக்கும். இதை விடத் தெளிவாக கொரோனா எந்த வேகத்தில் பரவிவருகிறது என்பதை விளக்கிவிட முடியாது. இதுவும் உங்களைப் பீதியாக்கவில்லை என்றால், இப்படிச் சொல்கிறேன்.

sdhrtjr26-ம் தேதி இரவு 10 மணிக்கு 5 லட்சத்தைத் தொட்ட எண்ணிக்கை, அடுத்த 4 மணி நேரத்தில் 5 லட்சத்து 25,000 என்று மாறியிருந்தது. சரி, ‘இதனால் கிட்னிக்கு எதுவும் பாதிப்பில்லையே, நாம் சேஃபாகத்தானே இருக்கிறோம்’ எனப் பெருமூச்சு விடுபவர் என்றால், மார்ச் 6-ம் தேதி அமெரிக்காவில் 319 நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், இன்று அந்த எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஒலிம்பிக்தான் தள்ளிவைக்கப்பட்டது, இதிலாவது சீனாவை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் நினைத்திருப்பார் போல.

இப்போது உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக முதலிடம் பிடித்திருக்கிறது அமெரிக்கா.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com