ilakkiyainfo

கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய விபரங்களை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிக்கு வாய்ப்பூட்டு – சர்வதேச ஊடகம்

கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய விபரங்களை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிக்கு வாய்ப்பூட்டு – சர்வதேச ஊடகம்
April 12
21:56 2020

கொரோனா வைரஸ் குறித்த மருந்துகளை கிசிச்சைகளை உருவாக்குவதற்கு அவசியமான மரபணுஅமைப்பினை கண்டுபிடித்த சீனா விஞ்ஞானியொருவர் மௌனமாக்கப்பட்டுள்ளார் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான பிரபல நிபுணர் ஒருவரே சீன அரசாங்கத்தினால் மௌனமாக்கப்பட்டுள்ளார் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளவால் பெண் எனப்படும் சி ஜெங்கிலி தொடர்பிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சி ஜெங்கிலி ஆபத்தான குகைகளில் வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதால் வெளவால் பெண் என அழைக்கப்பட்டவர்.

 

வருட இறுதியில் வுகானில் உருவாகிய சுவாசப்பிரச்சினை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்ட பின்னர் சி ஜெங்கிலி வுகானில் உள்ள அதிஉயர்பாதுகாப்புடன் கூடிய ஆய்வகத்திற்கு அழைக்கப்பட்டார் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

அங்கு அழைக்கப்பட்ட மூன்று நாட்களில் அவர் மிக முக்கியமான மரபணு அமைப்பினை கண்டுபிடித்துள்ளார்.

அவரது குழுவினர்சீனாவின் தென்பகுதியில் உள்ள யுனானில் வாழும் குதிரைகால் வெளவால்களே இந்த வைரசிற்கு காரணம் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

 

அவர்களது கண்டுபிடிப்புகள் இந்த நோய் சார்சினை போன்றது என்பதை உறுதி செய்துள்ளன.

வுகானின் 76 வார  முடக்கலின் பின்னர் வெளியே வந்த பத்திரிகையாளரான கா யு ஜனவரி 2 ம் திகதியவில் பெண் விஞ்ஞானியின் குழுவினர் மரபணு அமைப்பை உருவாக்கிவிட்டனர் என்பதையும் அதன் பின்னர் அவர்கள் மௌனமாக்கப்பட்டனர் என்பதையும் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் வுகானின் வைரஸ் தொடர்பான ஆய்வகத்தின் இயக்குநர் நோய் தொடர்பான முக்கிய தகவல்களை எவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என மின்னஞ்சலை தனது பணியாளர்களிற்கு அனுப்பிவைத்துள்ளார் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை வெளியாகி எட்டு நாட்களின் பின்னர் சாங்காயை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தலைமையிலான குழுவினர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை பயன்படுத்தி மரபணு அமைப்பை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு நாட்களின் பின்னர் அவரது ஆய்வுகூடம் மூடப்பட்டுள்ளது.

இணையத்தின் மூலம் வழங்கிய விரிவுரையொன்றில் சி ஜெங்கிலி ஜனவரி 14 ம் திகதி புதிய வைரஸ் மனிதர்களை தாக்கலாம் என்பதை தனது குழுவினர் கண்டுபிடித்;துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

 

அவரது குழுவினர் புதிய நோய் தொடர்பாக  ஜனவரி 23ம் திகதி விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் தாங்கள் குதிரைகால் வெளவாலில் கண்டுபிடித்த வைரசிற்கும் இந்த வைரசிற்கும் ஒரே மாதிரியான மரபணு அமைப்பு காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவில் உண்ணப்படும் பூனைபோன்ற ஒருவகை விலங்கின் மூலம் குதிரைகால் வெளவால்களில் சார்சினை கண்டுபிடித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

 

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com