கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம்: திணறும் பிரேசில்

பிரேசிலில் கடந்த சனிக்கிழமை கொரோனா வைரஸ் காரணமாக 965 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 22,013 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சனிக்கிழமை அன்று 16,508 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 347,398 பேர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.
கொரோனா பிரச்சனையை கையாள அதிபர் சயீர் பொல்சனாரூ சரியான நடவடிக்கை எடுக்காததே, இங்கு கொரோனா பூதாகரமாக அதிகரிக்க காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment