ilakkiyainfo

கொரோனா வைரஸ்: ‘வயிற்றிலிருக்கும் எனது குழந்தைக்காக போராடினேன்’ – கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டவர்களின் கதை

கொரோனா வைரஸ்: ‘வயிற்றிலிருக்கும் எனது குழந்தைக்காக போராடினேன்’ – கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டவர்களின் கதை
April 03
13:52 2020

பிரிட்டனில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களும் அதிகம்.

சிலருக்கு லேசான அறிகுறிகள் இருக்கலாம் அல்லது அறிகுறிகளே இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு மருத்துவமனைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லாமல் இருக்கலாம். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று பேரிடம் பேசினோம். அவர்கள் மூவருமே வாழ்வில் வெவ்வேறு கட்டத்தில் இருப்பவர்கள். கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.

‘வயிற்றில் இருக்கும் எனது குழந்தைக்காக போராடினேன்’

கரேன் மேன்னரிங் ஆறுமாத கர்ப்பிணியாக இருந்தார். அது அவருக்கு நான்காவது குழந்தை. 39 வயதாகும் கரேனுக்கு மார்ச் இரண்டாம் வாரம் இருமலும் காய்ச்சலும் இருந்தது ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வர மருத்துவ ஊழியர்கள் சற்று அஞ்சினர். ஆனால் 11ஆம் நாள் அது அனைத்தும் மாறியது.

“நான் 999 எண்ணை அழைத்தேன் (அவசர உதவி எண்) என்னால் மூச்சு விடமுடியவில்லை. நான் 999ஐ அழைத்தவுடன் எனது வீட்டின் முன் சிறிது நேரத்தில் அவசர ஊர்தி வந்தது,” என்று விவரிக்கிறார் கேன்.

“என்னால் சுவாசிக்க முடியவில்லை. எனவே அவர்கள் எனக்கு செயற்கை சுவாசம் வழங்கினார்கள்,” என்கிறார் கேன்.

கரேனுக்கு கோவிட் 19 இருப்பது உறுதியானது. அவரின் இரண்டு நுரையீரலிலும் நிமோனியா இருந்தது. மருத்துவமனையில் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

“என்னை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை,” என்கிறார் அவர். அது மிகவும் இருண்ட நாட்கள்; தனிமையில் இருந்தேன். இரண்டு மூன்று நாட்களுக்கு படுக்கையிலேதான் இருந்தேன். என்னால் கழிவறைக்குக் கூட செல்ல முடியவில்லை. மெத்தையின் போர்வையை மாற்ற வேண்டும் என்றால், என்னை அவர்கள் திருப்ப வேண்டும்,”

” நான் மூச்சிவிட சிரமப்பட்டேன். நான் உதவி கோருவேன். செவிலியர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு என்னிடம் வரும் வரை நான் காத்திருப்பேன். என்னை அமைதிப் படுத்த எனது குடும்பத்தார் என்னிடம் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பர்.

_111549082_karen3நான் உயிரிழந்துவிடுவேன் என அஞ்சினேன். எனது குடும்பத்தினரும் எந்த மோசமான நிலைக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். நான் மூச்சுவிட ஒவ்வொரு நொடியும் சிரமப்பட்டேன். என்னுடைய வாழ்க்கைகாக மட்டுமல்ல எனது வயிற்றிலிருக்கும் குழந்தையின் வாழ்க்கைக்கும் சேர்த்து போராடினேன்.” என்கிறார்.

“மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தவுடன் என் முகத்தில் பட்ட ஈரக் காற்றை என்னால் இன்னும் மறக்க முடியாது,”

“நானும் எனது கணவரும் காரில் ஜன்னலை திறந்து கொண்டு முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு வீடு வரை வந்தோம். அந்த காற்று மிகவும் அற்புதமாக இருந்தது. நான் திடீரென சின்ன சின்ன விஷயங்களை பாராட்ட தொடங்கினேன்.” என்கிறார் கரேன்.

தான் பணிபுரியும் அழகு நிலையத்தில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் கரேன் ஆனால் அவருக்கு உறுதியாக தெரியவில்லை. அதேபோல் இந்த வைரஸ் தொற்று தனது குடும்பத்தில் யாருக்கும் வராமல் போனது எவ்வாறு என்பது அவருக்கு தெரியவில்லை.

தனக்கு கோவிட் 19 தொற்று எளிதாக ஏற்படும் என ஜெசி க்ளார்கிற்கு தெரிந்திருந்தது. ஏனென்றால் அவருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்தது. மேலும் ஒரு வருடத்துக்கு முன்பு அவரின் ஒரு சீறுநீரகத்தை நீக்கிவிட்டனர். அவருக்கு 26 வயது. தனக்கு தொடர்ந்து இருமல் வந்தபோதும், மூச்சுவிட சிரமப்பட்டபோதும் மிகவும் கவலையடைந்தார் ஜெஸி. சில நாட்களில் அவரால் நடக்கவும் முடியவில்லை.

மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் ஜெஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

“எனது நெஞ்சு எலும்புகளிலும், முதுகிலும், வயிற்றிலும் பெரும் வலி இருந்தது.” என்று விளக்குகிறார் ஜெஸி. என்னை யாரோ அடித்தது போல நான் உணர்ந்தேன்,” என்கிறார் ஜெஸி.

அதற்கு இரண்டு நாட்களுக்கு பிறகு, போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்த பிறகு ஜெஸியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த டாம். அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் உடனடியாக பிரிக்கப்பட்டனர்.

“எனக்கு தனியாக இருக்க பயமாக இருந்தது; யாராவது எனக்கு உதவி செய்ய வேண்டும் என எண்ணினேன்” என்கிறார் ஜெஸி. எனக்கு பச்சை நிற மாஸ்க் வழங்கப்பட்டது. அதில் மூக்கு பகுதியை சுற்றி ஏதோ வித்தியாசமாக இருந்தது; கோவிட் 19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டேன். அங்கு ஒவ்வொரு மெத்தைக்கும் இடையில் தடுப்பு சுவர் இருந்தது. எனக்கு கோவிட் 19க்கான சோதனை செய்யப்படவில்லை.

அனைவருக்கும் சோதனை செய்ய முடியாது என எனது மருத்துவர் கூறினார். ஆனால் எனக்கு இருக்கும் என புரிந்து கொள்வது பாதுகாப்பானது என்றார். எனக்கு ஏற்படும் வலி எனது நுரையீரல்கள் வீங்குவதால் வருகிறது. என்றும் வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்'” என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு எனக்கு மூச்சுவிடுவதில் சிக்கல் இருந்ததில்லை. நீங்கள் மூச்சுவிடுவதை நிறுத்திவிடுவீர்களா அல்லது இது வைரஸ் தொற்றால் ஏற்படும் அறிகுறியா என்பதை புரிந்து கொள்ள முடியாமல் அச்சம் ஏற்பட்டது. ஜெஸி மருத்துவமனையில் ஆறு மணி நேரம் இருந்தார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஜெஸிக்காக டாம் ஆறு மணி நேரம் கார் பார்க்கிங்கில் காத்திருந்தார்.

ஐந்து நாட்களுக்கு பிறகு ஜெஸி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜெஸியால் தற்போது நடக்க முடியவில்லை. மேலும் அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தூங்குகிறார். சில நேரங்களில் இருமுகிறார். ஆனால் சுவாசிப்பதில் சிரமம் இல்லை.

“இளைஞர்கள் சிலர், தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என நினைக்கின்றனர். ஆனால் தற்போது பலரும் கொரோனா வைரஸை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர்; என் வயதுடையவர்களை இந்த கொரோனா தொற்று தாக்காது என சில செய்திகள் உண்டு ஆனால் அது அப்படியல்ல.”

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com