கொழும்பில் இந்தியப் பிரதமர் மோடி – படங்கள்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கங்காராமய விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் வெசாக் அலங்கார விளக்குகளையும் ஆரம்பித்து வைத்தார்.
இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை சிறிலங்கா பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து வாகன அணியாக கங்காராமய விகாரைக்கு சென்ற இந்திய, சிறிலங்கா பிரதமர்கள் விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து, கங்காராமய விகாரையின் வெசாக் அலங்கார விளக்குகளின் ஆழியை இயக்கி இந்திய பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.
இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மாளிகையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு சிறப்பு விமானம் மூலம் சிறிலங்காவை வந்தடைந்தார். சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.
இன்றும் நாளையும் கொழும்பில் நடக்கும் ஐ.நா வெசாக் நிகழ்வுகளில் அவர் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா புறப்படுவதற்கு முன்னர் இந்தியப் பிரதமர் தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,
“சிறிலங்காவில் இரண்டு நாள் பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளேன். இது இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளும் இரண்டாவது இருதரப்புப் பயணம். எமது உறுதியான உறவின் ஒரு அடையாளம்.
எனது பயணத்தின் போது, கொழும்பில் மே 12ஆம் நாள் அனைத்துலக வெசாக். நிகழ்வுகளில் இணைந்து கொள்ளவுள்ளேன். முன்னணி பௌத்த மதத் தலைவர்கள், புலமையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளேன்.
இம்முறை கண்டி தலதா மாளிகையை தரிசிக்கவுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment