ilakkiyainfo

கோத்தபய ஒரு விஷக்கிருமி: இலங்கை அமைச்சர் சாடல்

கோத்தபய ஒரு விஷக்கிருமி: இலங்கை அமைச்சர் சாடல்
September 24
12:55 2014

கொழும்பு: பொதுபல சேனாவும், கோத்தபய ராஜபக்சேவும் அரசாங்கத்தை அழிக்கும் விஷக்கிருமிகளாக இருப்பதாக ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவரே குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எழுச்சி காரணமாக ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியுள்ளன.

ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிக் கட்சிகள் பகிரங்கமாகவே அரசையும், அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் விமர்சிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அரசின் பின்னடைவுகளுக்கு பொதுபல சேனா மற்றும் அதன் போஷகரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே ஆகியோரே காரணம் என்று இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுபல சேனா தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதே போன்று நகர்ப்புறங்களில் வாழும் சிறுபான்மை மக்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் பாதுகாப்புச் செயலாளர் இறங்கியுள்ளார். இந்த நடவடிக்கைகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளன.

ஜே.வி.பி.யின் மீள் எழுச்சி குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையிலிருந்து மீள வேண்டுமாயின் அரசு நிர்வாகம், பொருளாதார கொள்கைகள் என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்” என்றார்.

பெண்களின் உள்ளாடையை சபையில் எடுத்துக்காட்டிய எம்.பி.

24-09-2014

01-1364792389-women-dress1-600ஊவா மாகாண சபைத் தேர்­தலில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வேட்­பாளர் தனது பிர­சா­ரத்தின் போது விநி­யோ­கித்த பையில் பெண்­களின் உள்­ளா­டை­க­ளையும் விநி­யோ­கித்­துள்ளார்.

இதில் என்ன ஆச்­ச­ரியம் என்றால் அவ்­வா­றான பையை பெளத்த குரு­வானர் ஒரு­வ­ருக்கும் வழங்­கி­யுள்ளார் என சபையில் நேற்று தெரி­வித்த ஐ.தே.கட்சி எம்.பி. பாலி­த­ரங்கே பண்­டார, பிர­சா­ரத்தின் போது விநி­யோ­கிக்­கப்­பட்ட பையையும் அதற்­குள்­ளி­ருந்­த­தாக கூறப்­படும் பெண்­களின் உள்ளாடை ஒன்றையும் சபைக்குள் எடுத்துக் காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற நிர்­மா­ணத்­துறை தொழில் அபி­வி­ருத்தி சட்ட மூலம் தொடர்­பான இரண்டாம் மதிப்­பீடு விவா­தத்தில் உரை­யாற்றும் போதே பாலித ரங்கே பண்­டார எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் பாலித ரங்கே பண்­டார எம்.பி. தொடர்ந்தும் உரை­யாற்றும் போது;

ஊவா மாகாண சபைத் தேர்­த­லோடு அர­சாங்­கத்தின் இறங்கு காலம் தொடங்கி விட்­டது. தேர்தல் பிர­சா­ரத்தில் முத­ல­மைச்சர் வேட்­பா­ளரின் இலக்கம் பதித்த பைகள் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தோடு அப்­பை­க­ளுக்குள் பெண்­களின் உள்­ளா­டைகள் பொதி செய்து வழங்­கப்­பட்­டுள்­ளது.

அது மட்­டு­மல்­லாது அபி­வி­ருத்­திக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதி­யி­லி­ருந்து பெரும் தொகை பிர­சா­ரத்­திற்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

இல­வச மருத்­துவ முகாம்கள் நடத்­தப்­பட்­டன . இரத்­தப்­ப­ரி­சோ­த­னைகள் சிறுநீர் பரி­சோ­த­னைகள் என பல்­வேறு மருந்து வகை­களும் வழங்­கப்­பட்­டன.

தேசப்­பற்று தொடர்­பாக பேசும் அர­சாங்கம் சீனா­வுக்கு கடல் வளத்­தையும் காணி­க­ளையும் அரசு தாரை வார்க்­கின்­றது.

இன்று நிர்­மா­ணத்­துறை அமைச்­சினால் முன்­வைக்­கப்­படும் சட்ட மூலம் கண்காணிப்பு என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே இது கொண்டு வரப்படுகிறது என்றும் பாலித ரங்கே பண்டார எம்.பி. தெரிவித்தார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com