உக்குவெல – எலகடுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
பாடசாலை மாணவி வீதியினை கடக்க முற்பட்ட போது வேகமாக பயணித்த முச்சக்கர வண்டி, மோதுண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்து வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த C.C.T.V கெமராவில் பதிவாகியுள்ளது.