ilakkiyainfo

சஜித்-,ரணில் விடாப்பிடி! :தனியறை சந்திப்பிலும் இணக்கம் இல்லை; மாத இறுதியில் மக்களை திரட்ட சஜித் தரப்பு நடவடிக்கை

சஜித்-,ரணில் விடாப்பிடி! :தனியறை சந்திப்பிலும் இணக்கம் இல்லை; மாத இறுதியில் மக்களை திரட்ட சஜித் தரப்பு நடவடிக்கை
August 09
01:44 2019

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் வேட்­பாளர் விட­யத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்சித் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் அக்­கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாச­வுக்­கு­மி­டையில் நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையும் இணக்­கப்­பா­டின்றி முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றது.

இதில் இரு­வ­ருமே தாம் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வேண்­டு­மென்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்­துள்­ள­துடன் அதனை வலி­யு­றுத்­தியும் இருக்­கின்­றனர்.

இந்­நி­லை­யி­லேயே இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான இந்த சந்­திப்பு இணக்­கப்­பா­டின்றி முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் நடை­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரிக்கும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு முன் சாட்சியமளித்த பின்னர் 8 மணி­ய­ளவில் மூடிய அறைக்குள் இந்த சந்­திப்பு நடை­பெற்­றி­ருக்­கின்­றது.

இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவும் 20 நிமி­டங்கள் வரை பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர்.

சந்­திப்­பின்­போது  கருத்து வெளி­யிட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான் ஜனா­தி­பதி வேட்பாளராக போட்­டி­யி­டு­வ­தா­கவும் சஜித் பிரே­ம­தா­ஸவை பிர­த­ம­ராக நிய­மிப்­ப­தா­கவும் தெரிவித்தி­ருக்­கின்றார்.

எனினும் இந்த யோச­னையை நிரா­க­ரித்த அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தான் ஜனா­தி­பதி வேட்பாளராக போட்­டி­யி­டு­வ­தா­கவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மிப்­ப­தா­கவும் தெரிவித்­தி­ருக்­கின்றார்.

எனினும் இந்த யோச­னையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிரா­க­ரித்­தி­ருக்­கின்றார்.

அந்­த­வ­கையில் இரு­வ­ருக்­கு­மி­டையில் 20 நிமி­டங்கள் நடை­பெற்ற இந்த சந்­திப்பு எந்­த­வி­த­மான இணக்­கப்­பா­டு­மின்றி முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றது.

எனினும் தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணியை அமைத்­ததன் பின்னர் இது தொடர்பில் தீர்­மானம் எடுக்கலாம் என இரு­வரும் சந்­திப்­பின்­போது முடிவு செய்­தி­ருக்­கின்­றனர்.

இரு­வ­ருமே ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் இந்த சந்­திப்பின் போது விடா­பி­டி­யா­கவே இருந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிர­தித்­த­லை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரேமதாஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்தி எதிர்­வரும் 24ஆம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்­து­வ­தற்கு சஜித் ஆத­ரவு தரப்பு நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது.

சுமார் 2 இலட்சம் மக்­களை கொழும்பில் திரட்டி இந்த ஆர்ப்­பாட்­டத்தை நடத்தி அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவை வேட்­பா­ள­ராக்க வேண்­டு­மென அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தற்கு சஜித் பிரே­ம­தாஸ ஆத­ரவு எம்.பி.க்கள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்கு என்ற கோஷத்தை முன்­வைத்தே இந்த மாபெரும் மக்கள் பேர­ணியை நடத்­து­வ­தற்கு சஜித் பிரே­ம­தா­ஸவின் ஆத­ரவு எம்.பி.க்கள் முயற்­சித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த திங்கட்கிழமை ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டுக்கட்சிகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவிருந்த தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் பிற்போடப்பட்டிருக்கின்றது.

புதிய தேசிய ஜனநாயக கூட்டணி குறித்த யாப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நிலவுகின்ற முரண்பாடுகளே இந்த தாமத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com