Site icon ilakkiyainfo

சட்டப்போராளி கெளரிசங்கரி!!

ஜனநாயகம்‌, மனித உரிமைகள்‌, சட்‌டத்தின்‌ ஆட்சிக்கு சவால்கள்‌ விடுக்கப்படும்‌ போது, உயர்‌ நீதிமன்றில்‌ என்றும்‌ போராடும்‌. ஒரு போராளி.

ஊடகங்கள்‌ முன்னிலையில்‌ தோன்றாத, ஆனால்‌ ஊடகங்களில்‌ அடிக்கடி உச்சரிக்கப்படுகின்ற ஒரு பெயர்‌. ஒடுக்கப்ப டுவோரின்‌, குரலற்றவர்களின்‌ குரல்‌.

அநியாயங்களுக்கும்‌ அக்கிரமங்களுக்கும்‌ எதிராக தனது கணவருடன்‌ சேர்ந்து நீதிமன்ற படிகளேறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம்‌ பெற்றுக்கொடுத்த வழக்குகள்‌ ஏராளம்‌.

பல சமயம்‌, வழக்குகளின்‌ போது, தனது சேவை பெறுநருக்காக தானே மனுதாரராக முன்னின்று நீதிக்காக போராடிய ஓர்‌ நீதி தேவதை.

அந்த நீதி தேவதையை இன்று இழந்து தவிக்கிறது தேசம்‌.

ஆம்‌ சிரேஷ்ட சட்டத்தரணி கெளரிசங்கரி தவராசா. ஆசியாவில்‌ தலை சிறந்த 100 சட்‌டத்தரணிகளில்‌ ஒருவரான கெளரிசங்கரி தவராசா,

35 வருட நீதிச்‌ சேவையில்‌ பயணித்துத்கொண்டிருந்த போது, கடந்த 23 ஆம்‌ திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்‌.

அன்னாரது இறுதிக்கிரியைகள்‌ இன்று ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற ஏற்பாடுகள்‌ செய்யப்‌.பட்டுள்ளன.

1955ஆம்‌ ஆண்டு ஒக்டோபர்‌ 29ஆம்‌ திகதி, யாழ்‌.அளவெட்டியில்‌ சண்முகசுந்தரம்‌,
யமுனாதேவி தம்பதியினருக்கு மகளாக கெளரிசங்கரி பிறந்தார்‌.

யாழ்‌.மகாஜன கல்லூரியில்‌ தனது பாடசாலைக்‌ கல்வியை நிறைவு, செய்த கெளரிசங்கரி, இலங்கைச்‌ சட்டக்‌ கல்‌.லூரியில்‌ தனது சட்டக்‌ கல்வியை பூர்த்தி செய்து 1987 ஜூன்‌ முதலாம்‌ திகதி உயர்‌ நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்‌ பிரமாணம்‌ செய்தார்‌.

இதனைவிட, இலங்கைத்‌ திறந்த பல்கலைக்‌ கழகத்தின்‌ சட்ட இளமானி பட்டத்தினையும்‌ பூர்த்தி செய்துள்ளார்‌.

சட்டக்கல்லூரியில்‌ கல்வி கற்கும்‌ வேளையில்‌, சக சட்டத்துறை மாணவனாக இருந்த யாழ்‌.புங்குடுதீவைசேர்ந்தகே.வி.தவராசாவை மனம்‌ விரும்பி திருமணம்‌ செய்துகொண்டார்‌ கெளரிசங்கரி தவராசா.

தனது கணவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவுடன்‌ இணைந்து, நீதி, நியாயம்‌, மனித உரிமைகள்‌, ஜனநாயகம்‌ சட்டத்‌தின்‌ மீதான ஆட்சிக்காக சிரேஷ்ட சட்டத்தரணி கெளரிசங்கரி தவராசா முன்னெடுத்தமகத்தான சேவைக்கு கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகங்கள்‌ சாட்சிகளாகும்‌.

சட்ட விரோதமான கைதுகள்‌, தடுப்புக்‌ காவல்களில்‌ இருந்து அப்பாவிகளை விடுவிக்‌கவும்‌, ஜனநாயகத்தினை பாதுகாக்காவும்‌, குரலற்றவர்களுக்காக குரல்‌ எழுப்பவும்‌ கெளரி சங்கரி தவராசா முன்னெடுத்த அத்தனை நடவடிக்கைகளுக்கும்‌, உயர்‌ நீதிமன்ற கட்டிடத்‌ தொகுதியின்‌ ஒவ்வொரு கற்களும்‌ சாட்சிசொல்லும்‌.

அத்தகைய ஒரு ஆளுமையை தமிழ்‌ இனமே இழந்து நிற்கிறது

சர்வதேச அளவில்‌ பேசப்படுகின்ற, பல. சட்டத்தரணிகள்‌ தயங்கும்‌ பல வழக்குகளில்‌ நியாயத்துக்காக துணிச்சலுடன்‌ போராடிய ஒரு மனித நேயமிக்க சட்டத்தரணியே கெளரிசங்கரி தவராசா.

மிக அன்பாக, கனிவுடன்‌ பழகும்‌ அவரின்‌ இழப்பானது மனிதநேயத்தை மதிக்கும்‌ சமூகத்துக்கும்‌ ஓர்‌ பேரிழப்பாகும்‌.

 

ஒரு நீதிமன்ற ஊடகவியலாளனாக, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரிசங்கரி தவராசா முன்னெடுத்த பலநூறு வழக்குகளில்‌ இருந்து சிலவற்றை வடிகட்டும்‌ போது, குரலற்றவர்களின்‌ குரலாக.
ஜனநாயக பாதுகாவலனாக அவர்‌ எவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளார்‌ என்பதை உணர்த்த முடியும்‌.

எப்போதும்‌,’தம்பி’ என்று பாசத்துடன்‌ அழைக்கும்‌, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரிசங்கரி தவராசா, எத்தகைய வேலைப்‌ பளுவுக்கு மத்‌தியிலும்‌ கூட, சந்தேகங்களை தீர்க்க அல்லது உதவிக்காக தொலைபேசியில்‌ அழைப்பெடுத்தால்‌ உடனே அதற்கு மிக்க கனிவுடன்‌ பதிலளிப்பவர்‌.

ஊடகவியலாளர்கள்‌ ௬ுதந்திரமாக செயற்‌,பட வேண்டும்‌, அவர்கள்‌ எந்த வகையிலும்‌ அடக்கு முறைகளுக்கு உள்ளாகக்‌.கூடாது என்பதில்‌ தெளிவாகவும்‌ உறுதியாகவும் இருந்தவர் சிரேஷ்டசட்டத்தரணி கெளரிசங்கரி தவராசா.

 

1979 ஆம்‌ ஆண்டு நாட்டுக்கு அறிமுகம்‌ செய்யப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்‌தின்‌, ஜனநாயகம்‌, மனித உரிமை விரோத போக்குக்கு எதிராக .ஜெனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன்‌ இணைந்து நீதிமன்ற படிகளேறிய சிரேஷ்ட சட்டத்தரணி கெளரிசங்கரி தவராசா, பலநூறு வழக்குகளில்‌ இன, மத பேதமின்றி நியாயங்களை பெற்றுக்கொடுக்க இறுதிவரை. துணை நின்றவராவார்‌.

அது மட்டுமன்றி, கடந்த 2019 ஏப்ரல்‌ மாதம்‌ உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின்‌ பின்னர்‌, பயங்கரவாத தடை சட்டத்தை கொண்டு முஸ்லிம்‌ சமூகத்தவர்கள்‌ மீது கைதுகளும்‌ தடுத்து வைப்புக்களும்‌ குறி வைத்த போதும்‌, பிரபல சட்டத்தரனிகள்‌ பலர்‌ பின்வாங்கிய நிலையில்‌ நியாயத்துக்காக முன்னின்று வாதாடியவர்‌ கெளரிசங்கரி

சமூக பிரச்சினைகள்‌, ஜனநாயக ரீதியிலான விவகாரங்கள்‌, உரிமை மீறல்களின்‌ போது, பல சந்தர்ப்பங்களில்‌ கட்டணமே பெறாமல்‌ நீதிமன்றில்‌ சிரித்த முகத்தோடு, எந்த ஏமாற்‌றங்களையும்‌ அளிக்காது ஆஜராகும்‌ ஒருவராகவும்‌ அவர்‌ இருக்கின்றார்‌.

அன்று கனிஷ்ட ஊடகவியலாளரான எஸ்‌.ஸ்ரீகஜன்‌ தமிழீழ விடுதலைப்‌ புலிகளுடன்‌ தொடர்பு என்ற சந்தேகத்தின்‌ பேரில்‌ 1998ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ மாதம்‌ பயங்கரவாத புலனாய்வுப்‌ பிரிவினரால்‌ கைது செய்‌
யப்பட்டிருந்தார்‌. அவரது கைதுக்கும்‌ தடுத்து வைப்புக்கும்‌ எதிராக அடிப்படை மனித உரிமை மீறல்‌ மனுவினை தாக்கல்‌ செய்து,
அவரது விடுதலைக்கு சிரேஷ்ட சட்டத்தரணி கெளரிசங்கரி தவராசா பங்களிப்பு செய்திருந்‌தார்‌

ஈகுவாலிட்டி நிறுவனத்தின்‌ உரிமையாளரும்‌ நன்கு அறியப்பட்ட பத்திரிகை வெளியீட்டாளருமான ஊடகவியளாளர்‌ வடிவேலு, யசிகரனும்‌ சக்தி தொலைக்காட்சி நிகழ்சித்‌தயாரிப்பாளரான வளர்மதியும்‌ கைது செய்‌யப்பட்டு நீதிமன்றில்‌ ஆஜர்படுத்தப்பட்டபோது 2008 இல்‌ குற்றமற்றவர்களென விடு,தலை செய்யப்பட்ட வழக்கிலும்‌, யுத்தத்தின்‌ இறுதி கட்டத்தில்‌ 2009ஆம்‌ ஆண்டு மாசிமாதம்‌ 20ஆம்‌ திகதி புலிகளின்‌ இலகுரக.விமானங்கள்‌ இரண்டு கொழும்பிலும்‌ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமை யிலும்‌ நடாத்திய தாக்குதலில்‌ ஊடகவியலாளரான வித்தியாதரனுக்கும்‌ தொடர்புண்டு என்ற சந்தேகத்தில்‌ 2009ஆம்‌ ஆண்டு பெப்ரவரி மாதம்‌ 26ஆம்‌ திகதி கைது செய்யப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க
முடியாது விடுவிக்கப்‌ பட்டமைக்கும்‌ கெளரிசங்கரியின்‌ வாதம்‌ மிக முக்கியமானதாக இருந்தது.

இதனைவிட ஊடகவியலாளர்களுக்காக, தனது கணவர்‌ கே.வி.தவராசாவுடன்‌ இணைந்து நீதிமன்றங்களில்‌ நடாத்திய நீதிப்‌
போராட்டங்களுக்கு சான்றுகள்‌ ஏராளம்‌ உள்‌ளன.

இவ்விதமான சில முக்கிய வழக்குகள்‌
வருமாறு,

* முன்னாள்‌ பாராளுமன்ற உறுப்பினர்‌ சிவானந்தன்‌ கிசோர்‌ செஞ்சிலுவை சங்க உத்தியோகத்தராக கடமையாற்றியபோது தமிழீழவிடுதலைப்‌ புலிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக 1999ஆம்‌ ஆண்டு சித்திரை மாதம்‌ பயங்கரவாதத்‌ தடைப்‌ பிரிவினரால்‌ கைது செய்யப்பட்டு 2000ஆம்‌ ஆண்டு மேமாதம்‌ விடுதலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தமை.

* தமிழீழ விடுதலைப்‌ புலிகளுக்கு கடற்‌,படையின்‌ இரகசிய தகவல்களை வழங்கியதாக கடற்படை வீரர்‌ நவாப்தீனுக்கு எதிராகதாக்கல்‌ செய்யப்பட்ட நான்கு வழக்குகளிலிருந்தும்‌ 14 வருடங்களின்‌ பின்னர்‌ அவர்‌
2014 இல்‌ விடுதலையாக செயற்பட்டமை

* முன்னாள்‌ பாதுகாப்புச்‌ செயலாளர்‌ கோட்‌டபாய கொலைமுயற்சி வழக்கில்‌ 2006ஆம்‌ ஆண்டுகைது செய்யப்பட்ட பிரித்தானியப்‌ பிரஜையான ரவிகுமார்‌, கொலை சதித்திட்‌டம்‌ தீட்டி தற்கொலை குண்டுதாரிக்கு முச்‌சக்கரவண்டியை கொள்வனவு செய்ய நிதிவழங்கிய குற்றச்சாட்டில்‌ ஐந்து வருட விசாரணையின்‌ பின்னர்‌ 2011ஆம்‌ ஆண்டு விடுதலையாக காரணமாகியமை.

*.. 2006இல்‌ படுகொலை செய்யப்பட்டபாராளுமன்ற உறுப்பினர்‌ ரவிராஜ்‌ தொடர்‌பான நீதிவான்‌ நீதிமன்ற வழக்கிலும்‌ 2016இல்‌ சட்டமா அதிபரினால்‌ மேல்‌ நீதிமன்றில்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட வழக்கிலும்‌ஆலோசனைச்‌ சட்டத்தரணியாக செயற்பட்‌டமை.

* த.தே.கூவின்‌ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி ப.அரியநேத்திரன்‌,செ.கஜேந்திரன்‌, சிவாஜிலிங்கம்‌ ஆகியநான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும்‌
2006 ஆம்‌, 2008ஆம்‌ ஆண்டுகளில்‌ ஜேர்மனியிலும்‌ அவுஸ்திரேலியாவிலும்‌ பொங்‌குதமிழ்‌ எழுச்சிப்‌ பேரணியில்‌ கூடியிருந்த புலம்பெயர்ந்த மக்கள்‌ மத்தியில்‌
ஈழத்தைப்‌ பெறப்‌ போராடும்‌ தமிழீழவிடுதலைப்புலிகள்‌ அமைப்பின்‌ தலைவர்‌ நடாத்தும்‌ போராட்டத்திற்கு.’ஆதரவளிக்கும்படி உரையாற்றியதாக பொலிஸ்‌ மா அதிபர்‌ குற்றப்புலனாய்‌வுத்துறைக்கு முறைப்பாடு செய்ததையடுத்து கொழும்பு பிரதான நீதிவான்‌ நீதிமன்றில்‌ வழக்குத்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட வழக்கில்‌ ஆஜராகியிருந்தமை.

* பாகிஸ்தான்‌ உயர்ஸ்தானிகர்‌ கொலைமுயற்சி வழக்கில்‌ பாகிஸ்தான்‌ உயர்ஸ்தானிகரான பசீர்‌ மொஹமட்‌ என்பவரை கொலை செய்ய சதித்திட்டம்‌ தீட்டி 2006ஆம்‌ ஆகஸ்ட்‌மாதம்‌ 14 ஆம்‌ திகதி நடாத்தப்பட்ட குண்டுத்‌தாக்குதல்‌ தொடர்பில்‌ கனகரத்தினம்‌ஆதித்தன்‌ மற்றும்‌ இருவருக்கும்‌ எதிராககொழும்பு மேல்‌ நீதிமன்றில்‌ சட்டமா அதிபரினால்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட வழக்கில்‌ கனகரத்தினம்‌ ஆதித்தனால்‌ வழங்கப்பட்டதாகஅரச சான்றாக மேல்‌ நீதிமன்றில்‌ முன்வைக்‌கப்பட்ட குற்ற ஒப்புதல்‌ வாக்குமூலம்‌ நிராகரிக்கப்பட காரணமாக இருந்தார்‌. (மேலதிக விசாரணைகள்‌ நடைபெறுகின்றன)

* 2009ஆண்டு சுதந்திர தின விழாவிலும்‌தியத்தலாவ இராணுவ முகாமிலும்‌ மஹிந்தராஜபக்ஷ, கோட்டாபாய ராஜபக்ஷ, சரத்‌பொன்சேகா ஆகிய பிரமுகர்களைக்‌ கொலைசெய்வதற்கு சதித்திட்டம்‌ தீட்டி கொலைமுயற்சியில்‌ ஈடுபட்டதாக தாக்கல்‌ செய்யப்பட்டவழக்கில்‌ முன்னாள்‌ பாராளுமன்ற உறுப்‌பினர்‌ கனகரெத்தினத்தின்‌ மகன்‌ ஆதித்தியன்‌
பத்தாண்டுகளின்‌ பின்‌ விடுதலையானமைக்கு பங்களித்தமை.

* 2005 ஆகஸ்ட்‌ மாதம்‌ 12ஆம்‌ திகதி இரவுசுமார்‌ 10.45 மணிக்கு சுட்டுக்‌ கொல்லப்‌பட்ட முன்னாள்‌ வெளிவிவகார அமைச்சர்‌ லக்ஸ்மன்‌ கதிர்காமர்‌ கொலை வழக்கில்‌ 2005
ஆம்‌ ஆண்டு கைதுசெய்யப்பட்ட சிதோர்‌. ஆரோக்கியநாதன்‌ பதின்மூன்று வருடங்களின்‌ பின்னர்‌ நீதிமன்றால்‌ 2018ஆம்‌ ஆண்டு விடுதலை செய்யப்பட காரணமாகியமை.

* 2018ஆண்டு ஆடி மாதம்‌ 2ஆம்‌ திகதியாழ்‌. வீரசிங்க மண்டபத்தில்‌ நடைபெற்ற அரச வைபவத்தில்‌ கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்‌ விஜயகலா மகேஸ்வரன்‌
நாட்டின்‌ பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்‌களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும்‌ வகையில்‌ தண்டனைச்‌ சட்டக்கோவை 120 பிரிவின்‌படி தண்டணை வழங்கக்‌ கூடிய குற்றத்தை புரிந்துள்ளார்‌ என்று பொலிஸாரால்‌ கொழும்பு பிரதான நீதிவான்‌ நீதிமன்றில்‌ தாக்கல்‌,
செய்யப்பட்ட வழக்கில்‌ இராஜாங்க அமைச்சருக்கு அன்றைய தினமே.
பிணையில்‌ விடுதலை கிடைக்க காரணமாகியமை.

* 2008இல்‌ ஐந்து மாணவர்கள்‌ உட்பட 11 இளைஞர்கள்‌ கடற்ப. டையினரால்‌ கடத்தப்பட்டு திருகோணமலையில்‌ அமைந்துள்ள சித்‌.’திரவதை முகாமில்‌ தடுத்து வைத்து கப்பம்‌ கோரப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையில்‌ திருகோணமலையில்‌ அமைந்துள்ள சித்திரவதை முகாமும்‌ முல்லைதீவில்‌ இயங்கிய கோட்டபாய சித்திரவதை, முகாமும்‌ முதன்‌ முதலாக வெளிக்கொண்டுவரப்பட்டமை.

* தனியார்‌ ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்திற்கெதிராக சுதந்திரவர்த்தக வலய ஊழியர்களினால்‌ 30.05.2011 ஆம்‌ திகதி நடாத்தப்பட்ட போராட்டத்தில்‌ பொலிஸ்‌ மற்றும்‌ இராணுவத்தினரால்‌ நடாத்தப்பட்ட கொடூரமான தாக்குதலினால்‌ படுகாயமடைந்த 14 ஊழியர்களின்‌ சார்‌.பாக அடிப்படை மனித உரிமைகள்‌ வழக்குகளை தாக்கல்‌ செய்தமை.

* பிரதம நீதியரசராக இருந்த சிராணி பண்டார நாயக்கவுக்காக முன்‌னெடுக்கப்பட்ட நீதித்துறை போராட்டத்திற்கான வழக்குகளிலும்‌ பங்‌கேற்றமை.

* மரண தண்டணை அமுலாக்குவதை இடைநிறுத்தும்படி 11 மனித உரிமை மீறல்‌ மனுக்களை தாக்கல்‌ செய்யப்படுவதற்கு காரணமாகியமை.

* கொரோனா நிலைமையால்‌ மரணிப்போரின்‌ சடலங்களை கட்‌டாய தகனத்துக்கு உட்படுத்துவதை ஆட்சேபித்து, அடக்கம்‌ செய்‌.யவும்‌ அனுமதியளிக்க வேண்டும்‌ என்று 4 அடிப்படை உரிமை மீறல்‌, மனுக்களை தொடுத்தமை.

* 20 ஆம்‌ திருத்த சட்ட மூலத்துக்கு எதிராக 3 விசேட மனுக்களைதாக்கல்‌ செய்தமை.

* குற்றப்புலனாய்வுத்‌ திணைக்களத்தின்‌ முன்னாள்‌ பனிப்பாளர்‌, ஷானி அபேசேகர, கைது செய்யப்பட்டதும்‌ அவருக்கு பிணைப்‌.பெற்றுக்கொள்ள மேன்‌ முறைமீட்டுநீதிமன்றிலும்‌, அவரது அடிப்படை உரிமைகளை பாதுகாக்க உயர்‌ நீதிமன்றிலும்‌ வழக்குகளைத்‌
தொடுத்து பிணை அனுமதி பெற்றமை.

* பயங்கரவாத தடைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ முன்னாள்‌ அமைச்சர்‌ ரிஷாத்‌ பதியுதீன்‌ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து அடிப்படை உரிமை மீறல்‌ மனு தாக்கல்‌ செய்தமை.

* உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்‌ தொடர்பில்‌ கைது செய்யப்பட்டு. தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ்‌ ஹிஸ்‌. புல்லாஹ்‌ விடயத்தினை ஆட்சேமித்து உயர்‌ நீதிமன்றில்‌ வழக்குத்‌ தாக்கல்‌ செய்தமை.

* உமிர்த்த ஞாயிறு தாக்குதல்‌ தொடர்பில்‌ கைது செய்யப்ப்பட்ட ரிஷாத்‌பதியுதீனின்‌ சகோதரர்‌ ரியாஜ்‌ பதியுதீன்‌, முன்னாள்‌ மேல்‌ மாகாண ஆளுநர்‌ அசாத்‌ சாலி உள்ளிட்டோர்‌ சார்பில்‌ தானே மனுதாரராக: முன்னின்று அடிப்படை உரிமை மீறல்‌ மனுக்களை தாக்கல்‌ செய்தமை.

இதனையொத்த பல நூறு வழக்குகள்‌ சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி.சங்கரி தவராசாவினால்‌ நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னெடுத்து, செல்லப்பட்டுள்ளன.

பல வழக்குகள்‌ நியாயம்‌ பெற்றுக்கொள்வதற்காக. நிலுவையில்‌ உள்ளன. ஆனால்‌ கெளரிசங்கரி இவ்வுலகை விட்டு
விடைபெற்றுவிட்டார்‌ என்பது துன்பியல்‌ நிகழ்வே.

எம்‌.எப்‌.எம்‌.பஸீர்‌
வீரகேசரி வார வெளியீடு

Exit mobile version